தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay Antony Accident: விஜய் ஆண்டனி கவலைக்கிடம்? வெளியானது புதிய அறிக்கை!

Vijay Antony Accident: விஜய் ஆண்டனி கவலைக்கிடம்? வெளியானது புதிய அறிக்கை!

Jan 20, 2023, 05:50 PM IST

google News
இந்த விபத்தில சுயநினைவை இழந்த விஜய் ஆண்டனியின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதோடு, பற்களும் உடைந்து விட்டதாக சொல்லப்பட்டது.
இந்த விபத்தில சுயநினைவை இழந்த விஜய் ஆண்டனியின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதோடு, பற்களும் உடைந்து விட்டதாக சொல்லப்பட்டது.

இந்த விபத்தில சுயநினைவை இழந்த விஜய் ஆண்டனியின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதோடு, பற்களும் உடைந்து விட்டதாக சொல்லப்பட்டது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு வலம் வருபவர் விஜய் ஆண்டனி. சினிமாவிற்குள் இசையமைப்பாளராக அறிமுகமாகி பிரபலமான விஜய் ஆண்டனி சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். இதனையடுத்து கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘நான்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 

அந்தப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்தார். மக்களிடம் அந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து, ‘சலிம்’ ‘இந்தியா பாகிஸ்தான்’ ‘ ‘பிச்சைக்காரன்’ ‘சைத்தான்’ ‘அண்ணாதுரை’ ‘காளி’ ‘கொலைகாரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவர் நடித்த படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் இயக்குநர் சசிக்குமார் இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன். அனைத்துதரப்பு மக்களிடமும் விஜய் ஆண்டனியை கொண்டு சேர்த்த இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாவும், அந்தப்படத்தை தானே தயாரிக்க இருப்பதாகவும் அறிவித்தார் விஜய் ஆண்டனி. 

இந்தப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட படகு விபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி படுகாயம் அடைந்தார். உடன் நடித்த கலைஞர்களுக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் படுகாயம் அடைந்த விஜய் ஆண்டனியை படக்குழு சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இந்த விபத்தில சுயநினைவை இழந்த விஜய் ஆண்டனியின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதோடு, பற்களும் உடைந்து விட்டதாக சொல்லப்பட்டது. அதனைத்தொடர்ந்து விஜய் ஆண்டனி மலேசியாவில் இருந்து சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அவருக்கு முக்கிய அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் உடல் நிலை குறித்து பிரபல இயக்குநர் சுசீந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

 

 

அந்த அறிக்கையில், “ பிச்சைக்காரன்- 2 படப்பிடிப்பில் விபத்தில் காயம் அடைந்த விஜய் ஆண்டனி சார் 2 நாட்களுக்கு முன்னாடியே சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து விட்டார். 2 வாரம் மருத்துவர்கள் ஓய்வு எடுக்க சொல்லி இருக்கிறார்கள். கூடிய சீக்கிரம் ரசிகர்களிடம்  வீடியோ வழியாக அவர் பேசுவார்.சார் பற்றின் தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுகிறேன்” என்று அவர் அதில் பதிவிட்டு இருக்கிறார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை