சூர்யாவுடன் மோதும் சூர்யா! இது என்ன புது ட்விஸ்ட்டா இருக்கு!
Oct 13, 2024, 11:48 AM IST
பீனிக்ஸ்' திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி ரிலீசாக உள்ளதால், பாக்ஸ் ஆபிஸில் மெகா பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நடிகர் சூர்யாவின் 'கங்குவா'வை எதிர்கொள்ள உள்ளது.
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா, இப்படம் வரலாற்று பின்னணி கொண்ட படமாக உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தில் இந்தி நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். 3டி முறையில் வரலாறு படமாக உருவாகியுள்ள 'கங்குவா' திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட மொத்தம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தினை கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக இருந்தது. இருப்பினும் நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் அதே தேதியில் ரிலீசான காரணத்தால் கங்குவா படத்தின் ரீலிஸ் தள்ளிப்போனது. மேலும் தீபவாளியை ஒட்டி படம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் அதுவும் தள்ளிப்போகியுள்ளது. தீபாவளி அன்று பல படங்கள் வெளியாவது இதற்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தற்போது இப்படம் நவம்பர் 14 அன்று வெளியாக உள்ளது.
சூர்யா விஜய்சேதுபதி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விஜய் சேதுபதி இருந்து வருகிறார். இந்தியவிலும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். மேலும் அவரது மகன் சூர்யா முன்னதாக விஜய் சேதுபதி மற்றும் அஞ்சலி நடித்த 'சிந்துபாத்' படத்தில் துணை வேடத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானார்.தற்போது ஸ்டண்ட் மாஸ்டர் அன்ல் அரசு இயக்குநராக அறிமுகமாகும் 'பீனிக்ஸ்' படத்தின் மூலம் சூர்யா இப்போது கதாநாயகனாக அறிமுகமாகிறார். 'பீனிக்ஸ்' படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தின் வெளியீட்டு தேதியை வெளியிட்டுள்ளனர். விளையாட்டு தொடர்பாக உருவாகி உள்ள இப்படம் நவம்பர் 14 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இப்படத்தில் வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன் மற்றும் மூனர் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், மேலும் முன்னதாக வெளியிடப்பட்ட டீஸர் சரியான ஆக்ஷன் என்டர்டெய்னராக இப்படம் இருக்கும் என உறுதியாகியுள்ளது. இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் மற்றும் பிரவீன் கேஎல் முறையே ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பைக் கையாள்கின்றனர். 'பீனிக்ஸ்' படம் முதலில் நவம்பர் 30 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் தயாரிப்பாளர்கள் சூர்யாவின் 'கங்குவா'வுடன் பாக்ஸ் ஆபிஸ் மோதலை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுத்து தற்போது நவம்பர் 14 அன்று வெளியாகி உள்ளது.
சூர்யா Vs சூர்யா
'பீனிக்ஸ்' திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி ரிலீசாக உள்ளதால், பாக்ஸ் ஆபிஸில் மெகா பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நடிகர் சூர்யாவின் 'கங்குவா'வை எதிர்கொள்ள உள்ளது. மேலும் அது சூர்யா வெர்சஸ் சூர்யாவாக இருக்கும். இந்நிலையில் வரலாற்று ரீதியாக 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கங்குவா படம் மட்டும் அந்த தேதியில் வெளியாக இருந்தது. இந்நிலையில் மற்றொரு படமும் வெளியாக உள்ளது. இதில் எந்த சூர்யாவின் படம் பந்தயம் அடிக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.
டாபிக்ஸ்