தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Suriya: விஜயகாந்த் நினைவிடத்தில் கதறி அழுத சூர்யா

Suriya: விஜயகாந்த் நினைவிடத்தில் கதறி அழுத சூர்யா

Aarthi V HT Tamil

Jan 05, 2024, 11:50 AM IST

google News
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

நடிகரும் தேதிமுக நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவால் கடந்த 28ஆம் தேதி இயற்கை எய்தினார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இருமல், சளி மற்றும் தொண்டை வலி பாதிப்பு அவருக்கு இருந்த நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தேமுதிக அலுவலகத்தில் உள்ள நினைவிடத்தில் இன்று ( டிச. 5) நடிகர் சூர்யா சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது கேப்டனை நினைத்து அவர் கதறி அழுதார். அத்துடன் அவர் அடக்கம் செய்த இடத்தில் சற்று நேரம் அமர்ந்து இருந்தார்.

நேற்று ( டிச. 4) காலை நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன் நடிகர் கார்த்திக் இருவரும் சென்று அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக விஜயகாந்த் உடல் நிலை சற்று தேறிய நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி அன்று உடல் நிலைக்குறைவு காரணமாக மீண்டும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 28ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் 29ம் தேதி மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை