பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி?
Mar 23, 2022, 04:46 PM IST
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் சக்கரவர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக வெளியே சென்று உள்ளார்.
பிக் பாஸ் நான்காவது சீசனனில் கலந்து கொண்டவர் சுரேஷ் சக்கரவர்த்தி. மக்களிடம் குறைவான வாக்குகள் பெற்ற நிலையில் , இவர் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியே அனுப்பட்டார் . இதனையடுத்து தற்போது , பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இவர் அசத்தலாக என்ட்ரி கொடுத்து கலந்து வந்தார்.
மற்ற போட்டியாளர்கள் இடையே இவர் அடிக்கடி சண்டை முட்டிவிடுவதால் , நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே மக்களிடம் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியே சென்றார் . ரசிகர்களால் இவர் தாத்தா என அனைத்து போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார் . சுரேஷ் சக்கரவர்த்தி வயசானாலும் மற்ற போட்டியாளர்களுக்கு டப் கொடுப்பது போல் விளையாடி வருகிறார் .
அத்துடன் இவர் வயதானாலும் கடுமையாக விளையாடி வருவது போட்டியாளர்களுக்குப் பிடித்து வருகிறது. அதே சமயம் இவர் பிறருக்கு இடையில் கொளுத்தி போடுவதிலும் வல்லவர் . அனிதாவுக்கும், சுரேஷ் சக்கரவர்த்திக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்து இருக்கிறது .
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு யூ - டியூப் சேனலில் சமையல் நிகழ்ச்சி நடத்தி வந்தார் . கோழி முட்டை டாஸ்கில் சுரேஷ் சக்கரவர்த்தி மற்ற போட்டியாளர்களுக்கு சமமாக விளையாடி வந்தார் . அப்போது சுரேஷ் சக்ரவர்த்தி , அனிதா இருவருக்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது .
இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் சக்கரவர்த்தி , உடல்நலக் குறைவு காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது . ஏற்கனவே சுரேஷ் சக்கரவர்த்திக்கு உடம்பு சரியில்லாமல் இல்லை என்றும் ரொம்ப முடியாமல் போனதால் அவர் பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார் .
இதனைக் கேட்ட ரசிகர்கள் , உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் என சமூக வலைதளங்களில் சொல்லி இருக்கிறார் . அவருக்கு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் , கிடைத்த இரண்டாவது வாய்ப்பையும் நல்ல படியாகப் பயன்படுத்தி உள்ளார் . இவருடைய விளையாட்டு திறமையைப் பார்த்து பலரும் பாராட்டி இருக்கின்றனர் .
கமல் ஹாசன் நிகழ்ச்சியை விட்டு வெளியே சென்றவுடன் , வனிதா விஜயகுமார் புதிதாக யார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறார் என தெரியாமல் நிகழ்ச்சியை விட்டு வெளியே சென்றார் . அதே போல் தற்போது சுரேஷ் சக்கரவர்த்தியும் நிகழ்ச்சியில் இருந்து இதே போன்று உடல் நலம் காரணமாகப் பாதியிலே நிகழ்ச்சியை விட்டு வெளியே சென்று இருக்கிறார் .