Rajinikanth Health: எல்லாம் சரியா இருக்கு தலைவா.. 4 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பிய ரஜினிகாந்த்
Oct 04, 2024, 07:31 AM IST
Rajinikanth Health: மருத்துவமனையில் 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்த் நலமாக வீடு திரும்பி உள்ளது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Rajinikanth Health: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 30 ஆம் தேதி சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தை விட்டு வெளியேறும் பிரதான இரத்த நாளத்தில் அவருக்கு வீக்கம் ஏற்பட்டது. இது அறுவை சிகிச்சை அல்லாத, டிரான்ஸ்காதெட்டர் முறை மூலம் சிகிச்சையளிக்கப்பட்டது.
மூத்த இருதயவியல் மருத்துவர் சாய் சதீஷ் ரஜினிகாந்தின் ரத்தக் குழாயில் ஸ்டண்ட் வைத்து வீக்கத்தை முழுவதுமாக சரி செய்தார். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக இந்த சிகிச்சை அவருக்கு நடந்தது.
மருத்துவமனை அறிக்கை
ரஜினிகாந்த் சிகிச்சை தொடர்பாக மருத்துவமனை சார்பில் வெளியான அறிக்கையில், “ அப்பல்லோ மருத்துவமனை நடிகர் ரஜினிகாந்த்தின் உடல்நிலை குறித்த விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ரஜினிகாந்த் 30 செப்டம்பர் 2024 அன்று கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்திலிருந்து ( Aorta ) வெளியேறும் பிரதான இரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்தது. அதற்கு அறுவை சிகிச்சை அல்லாத டிரான்ஸ்கேதீட்டர் முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. மூத்த இருதயநோய் நிபுணர் டாக்டர். சாய் சதீஷ், அவரின் பெருநாடியில் ஸ்டென்டை பொறுத்தி வீக்கத்தை முழுவதுமாக மூடியுள்ளனார்.
இந்நிலையில் திட்டமிட்டபடி இந்த சிகிச்சைக்கான நடைமுறைகள் அனைத்தும் நடந்து முடிந்தன என்பதை அவரது நலம் விரும்பிகளுக்கும் ரசிகர்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகிறோம். மேலும், ரஜினிகாந்த் நன்றாக இருக்கிறார். அவர் இன்னும் இரண்டு நாட்களில் வீட்டிற்கு திரும்புவார் “ என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து ஐசியு பிரிவில் இருந்து நார்மல் வார்டிற்கு மாற்றப்பட்டு அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் 4 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று ( அக். 4 ) இரவு 11 மணி அளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதனிடையே ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி, 2024ல் வெளியாக உள்ளது. இப்படத்தை தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெளியிட உள்ளனர் தயாரிப்பாளர்கள். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காரணத்தினால் எந்த ஒரு பட விளம்பர நிகழ்ச்சியிலும் அவரால் கலந்து கொள்ள முடியாமல் போயுள்ளது. சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதால் மூன்று வாரத்திற்கு ரஜினிகாந்த் ஒய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள்.
இளையராஜா
முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நல்ல உடல்நலம் பெற்று, ஆரோக்கியமாக வாழ, எல்லாம் வல்ல இறைவனின் அருள் எப்போதும் கிடைக்கட்டும் என இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்தினார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ஆருயிர் நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நாளை வீடு திரும்பவிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நல்ல உடல்நலம் பெற்று, ஆரோக்கியமாக வாழ, எல்லாம் வல்ல இறைவனின் அருள் எப்போதும் கிடைக்கட்டும். வருக, வருக..’’ என பதிவிட்டு இருந்தார்.
டாபிக்ஸ்