தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajay Krishna: ‘9 மாசத்துல குழந்தையா? தப்பா பேசுறாங்க’ வருந்தியஅஜய் ஜெஸ்ஸி!

Ajay Krishna: ‘9 மாசத்துல குழந்தையா? தப்பா பேசுறாங்க’ வருந்தியஅஜய் ஜெஸ்ஸி!

Jan 21, 2023, 07:00 AM IST

google News
மருத்துவ சோதனை நடந்தது. அதில் ஸ்கேன் செய்து குழந்தை நன்றாக இருக்கிறது என்று தெரிந்த உடனேயே கர்ப்பம் தரித்த செய்தியை வெளியிட்டோம். ஆனால் அதை தாண்டியும் சிலர் பேசுகிறார்கள். (Ajay Instagram )
மருத்துவ சோதனை நடந்தது. அதில் ஸ்கேன் செய்து குழந்தை நன்றாக இருக்கிறது என்று தெரிந்த உடனேயே கர்ப்பம் தரித்த செய்தியை வெளியிட்டோம். ஆனால் அதை தாண்டியும் சிலர் பேசுகிறார்கள்.

மருத்துவ சோதனை நடந்தது. அதில் ஸ்கேன் செய்து குழந்தை நன்றாக இருக்கிறது என்று தெரிந்த உடனேயே கர்ப்பம் தரித்த செய்தியை வெளியிட்டோம். ஆனால் அதை தாண்டியும் சிலர் பேசுகிறார்கள்.

விஜய் டிவியின் மிகவும் பிரபலமான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் பாடகர் அஜய் கிருஷ்ணா; உதித் நாராயணன் போன்று இருக்கும் இவரது குரல் இவரின் மீது அதிக கவனத்தை திருப்பியது; 

இவர் ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடி இன்ஸ்டாவில் பதிவிட்ட போது ரசிகையாக அந்த பாடலை பாராட்டி பதிவு போட்டவர்தான் ஜெஸ்ஸி; அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், அது பின்னாளில் காதலாக மாறியது; தொடர்ந்து இவர்களது காதலுக்கு பெற்றோரும் சம்மதம் தெரிவிக்க, இந்து, கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது. 

இவர்களது காதல் தொடர்பாகவும், திருமணம் தொடர்பாகவும் பல்வேறு பேட்டிகளை மீடியாக்களில் கொடுக்க, விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்வதற்கான வாய்ப்பு கதவை தட்டியது. நிகழ்ச்சியில் பங்கேற்று விளையாடிக்கொண்ருந்த இந்த தம்பதி, திடீரென்று அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தனர். அதன் பின்னர்தான் தெரிந்தது ஜெஸ்ஸி கர்ப்பமான காரணத்தினாலேயே இவர்கள் வெளியேறினார்கள் என்று.

இந்த நிலையில் ஜெஸ்ஸிக்கு அண்மையில் வளைகாப்பு நடந்து முடிந்தது. இந்த நிலையில், பிஹன்யுட்ஸ் யூடியூப் சேனலில் பேசிய ஜெஸ்ஸி“ திருமணம் முடிந்த உடனேயே நான் கர்ப்பம் தரித்து விட்டேன். ஆனால் நிறைய பேருக்கு இது குறித்தான விழிப்புணர்வு இல்லை;

 

நாங்கள் வார, மாதங்களை சரியாக கணக்கிடுகிறோமோ.. இல்லையோ வெளியே இருப்பவர்கள் அவற்றை கணக்கிட்டு அதனை தவறான கண்ணோட்டத்தில் எடுத்து சென்று விடுவார்கள்; அதனால்தான் நான் கர்ப்பம் தரித்த செய்தியை நெடுநாளாகியும் சொல்ல வில்லை; அதன் பின்னர் மருத்துவ சோதனை நடந்தது. அதில் ஸ்கேன் செய்து குழந்தை நன்றாக இருக்கிறது என்று தெரிந்த உடனே கர்ப்பம் தரித்த செய்தியை வெளியிட்டோம். ஆனால் அதை தாண்டியும் சிலர் பேசுகிறார்கள். ஆனால் நாங்கள் அதை கண்டுகொள்ள வில்லை. நாங்கள் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கான காரணமும் இதுதான். கர்ப்பம் தரித்த அடுத்த நாள் ஷூட்டிங் இருந்தது; அதில் கலந்து கொண்ட பின்னர் எனது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். அதனால்தான் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினோம்” என்று பேசினார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை