தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sundari Serial: ‘யார் இருந்தாலும் போனாலும் அது வேணும்’ சுந்தரி கேப்ரில்லா ஓப்பன்!

Sundari Serial: ‘யார் இருந்தாலும் போனாலும் அது வேணும்’ சுந்தரி கேப்ரில்லா ஓப்பன்!

Oct 08, 2023, 05:30 AM IST

google News
Gabrella Sellus: ‘ஆனந்தராகம் சீரியல் ரொம்ப பிடிக்கும். அதில் வரும் அனுஷா எனக்கு ரொம்ப பிடிக்கும். சைத்ரா எனக்கு ரொம்ப பிடிக்கும்’
Gabrella Sellus: ‘ஆனந்தராகம் சீரியல் ரொம்ப பிடிக்கும். அதில் வரும் அனுஷா எனக்கு ரொம்ப பிடிக்கும். சைத்ரா எனக்கு ரொம்ப பிடிக்கும்’

Gabrella Sellus: ‘ஆனந்தராகம் சீரியல் ரொம்ப பிடிக்கும். அதில் வரும் அனுஷா எனக்கு ரொம்ப பிடிக்கும். சைத்ரா எனக்கு ரொம்ப பிடிக்கும்’

சுந்தரி சீரியலை தனியாளகா தாங்கிக் கொண்டிருக்கும், கேப்ரெல்லா செல்லஸ், சன்டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் நேற்று அளித்த சுவாரஸ்யமான பேட்டி இதோ:

‘‘பொறுப்பு நமக்கு வரும் போது, பயமும் வந்துவிடும். சுந்தரி சீரியல் அப்படி தான். அதில் கலெக்டர் ஆக வேண்டும் என்று நினைத்தேன். ஆகிவிட்டேன். இப்போ அந்த பொறுப்பை எப்படி கொண்டு போகப் போறோம் என்கிற பயம் தான் இப்போது இருக்கிறது. 

பதவி வரும் போது, பயம் இருக்க வேண்டும். பயம் கலந்த பொறுப்பு இப்போ இருக்கு. நம்ம கனவை நிறைவேற்றுவதை விட பெரிய சந்தோசம் வேறு கிடையாது. சுந்தரியா ரொம்ப சந்தோசமா இருக்கேன். 

உண்மை, நேர்மை, நியாயம் எல்லாம் இப்போ வந்திருக்கும் புது சுந்தரியிடம் பார்க்கலாம். உறவுக்காக போராடிய சுந்தரி, இனி ஊருக்காக போராடுவேன். சுந்தரி கலெக்டர் ஆனதே அதற்காக தான். 

எப்போதும் திரையில் வரும் விசயங்கள் நம் நிஜ வாழ்க்கையில் ஒத்துப்போகும். அந்த மாதிரி தான், சுந்தரி சீரியலின் தாக்கம், படித்துக் கொண்டிருக்கும் பலருக்கு தூண்டுகோளாக மாறியிருக்கிறது. ஒருவரின் கனவுக்கு முதல் படியாக நாம் இருக்கிறோம் என்றால், அதுவும் எனக்கு சந்தோசமாக இருக்கிறது. 

படிப்பு பெண்களுக்கு ரொம்ப முக்கியம். நான் படிக்காதவள் தான். படிப்பு, யார் தயவும் இல்லாமல் பெண்களை முன்னேற்றும். அதே போல கைத்தொழில் தெரிய வேண்டும். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். யார் இருந்தாலும், போனாலும் கடைசி வரை நாம் வாழ, நம்மிடம் கல்வி இருக்க வேண்டும், தொழில் இருக்க வேண்டும். 

ஆனந்தராகம் சீரியல் ரொம்ப பிடிக்கும். அதில் வரும் அனுஷா எனக்கு ரொம்ப பிடிக்கும். சைத்ரா எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு நடிக்கத் தெரியும், உழைக்கத் தெரியும். அதை தாண்டி எதுவும் தெரியாது. அதை எனக்கு கற்றுக் கொடுத்தது சைத்ரா தான்,’’

என்று அந்த பேட்டியில் கேப்ரெல்லா செல்லஸ் கூறியுள்ளார். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி