தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: பத்திரிக்கை வைக்க சென்ற கயலுக்கு நடந்த அவமானம் - கடும் கோபத்தில் எழில்

Kayal Serial: பத்திரிக்கை வைக்க சென்ற கயலுக்கு நடந்த அவமானம் - கடும் கோபத்தில் எழில்

Aarthi Balaji HT Tamil

Aug 14, 2024, 10:41 AM IST

google News
Kayal Serial: பெரியம்மா வடிவு தட்டை வாங்கி தூக்கி எரிந்துவிடுகிறார். இதனால் கடும் கோபத்திற்கு செல்கிறார் எழில். அத்துடன் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ முடிந்தது.
Kayal Serial: பெரியம்மா வடிவு தட்டை வாங்கி தூக்கி எரிந்துவிடுகிறார். இதனால் கடும் கோபத்திற்கு செல்கிறார் எழில். அத்துடன் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ முடிந்தது.

Kayal Serial: பெரியம்மா வடிவு தட்டை வாங்கி தூக்கி எரிந்துவிடுகிறார். இதனால் கடும் கோபத்திற்கு செல்கிறார் எழில். அத்துடன் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ முடிந்தது.

Kayal Serial: சன் தொலைக்காட்சியில் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலின் இன்றைய ( ஆகஸ்ட் 14 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இன்றைய எபிசோட்

அதில், அன்பு “ பெரியப்பா, பெரியம்மாவிற்கு தானே முதல் பத்திரிக்கை வைக்க போறீங்க என கேட்க, மூர்த்தி, அவங்க கண்டிப்பாக அவமானப்படுத்த போகிறார்கள். அதை நினைக்கும் போது தான் சற்று பயமாக இருக்கிறது “ என்றார்.

உடனே கயல், ” அதில் எனக்கு ஒரு பிரச்னையுமே இல்லை. அம்மாவின் ஆசை தான் என் கண்களுக்கு இப்போது முக்கியமாக தெரிகிறது “ என சொல்லிவிட்டார்.

மறுபக்கம் மூர்த்தி, தனம், கயல், எழில் உள்ளிட்டோர் பத்திரிக்கை எடுத்து கொண்டு பெரியப்பா, பெரியம்மாவை பார்க்க அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.

மூர்த்தி, ” இரண்டு பேரும் சேர்ந்து நின்று பத்திரிக்கை வாங்கி கொள்ளுங்கள் என சொல்ல அதற்கு பெரியப்பா, கயலினால் நான் பட்ட அவமானங்கள் போதும்.. கிளம்பு ” என சொல்கிறார். இப்படி பேசி கொண்டே இருக்கும் போது பெரியம்மா வடிவு தட்டை வாங்கி தூக்கி எரிந்துவிடுகிறார். இதனால் கடும் கோபத்திற்கு செல்கிறார் எழில். அத்துடன் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ முடிந்தது.

நேற்றைய எபிசோட்

கயல், எழிலின் திருமண ஏற்பாடு படு பயங்கரமாக நடக்கிறது. என்ன தான் கயல் வீடு ஏறி சென்று தன் பெரியப்பா, பெரியம்மா, அத்தை ராஜலட்சுமியை அழைத்தாலும் அவர்கள் மனம் இன்னும் மாறவே இல்லை.

ராஜலட்சுமி ஏதோ பிளான் போட, அவரின் கணவர், ” நீ செய்வது எல்லாம் தவறான ஒன்று “ என எச்சரித்தார். இருப்பினும் அவர் தனது கணவரின் குரலுக்கு செவி சாய்க்கவில்லை. மறுபக்கம் பெரியப்பா, பெரியம்மாவும் வழக்கம் போல் ராஜலட்சுமியை ஏத்திவிட்டார்கள்.

பெரியப்பா, பெரியம்மா, அத்தை ராஜலட்சுமிக்கு திருமணத்திற்கு ஸ்பெஷலாக கொடுக்க கயல் ஏதோ ஒரு பொருளை வாங்கி உள்ளார். அதை பார்த்த அவரின் தங்கை யாருக்கு அக்கா, இது எல்லாம் என கேட்க. முக்கியமான நம் சொந்தக்காரங்களுக்கு எடுத்து வைத்து இருக்கிறேன் என சொல்கிறார்.

மறுபக்கம் எழிலின் தாய், தீபிகாவிடம், “ எழில் இப்போது கயல் என்ற சைக்கிள் மீது ஆசைப்படுகிறான். ஆனால், நான் தீபிகா என்ற விலை உயர்ந்த காரை வாங்கி கொடுக்க போகிறேன் “ என சொல்கிறார். ஒரு பக்கம் கயல், எழில் திருமண ஏற்பாடு நடக்க அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று மற்றொரு கும்பல் கிளம்பி உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி