Salaar: சலார் படத்தின் முதல் டிக்கெட்டை வாங்கிய பாகுபலி இயக்குநர் ராஜமெளலி!
Jan 06, 2024, 03:37 PM IST
எஸ்.எஸ்.ராஜமௌலி பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்து டிசம்பர் 22ல் வெளியாகும் சலார் படத்தி முதல் டிக்கெட்டை வாங்கினார்.
பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி சலார் படத்தின் முதல் பாகத்திற்கான முதல் டிக்கெட்டை வாங்கியுள்ளார்.
பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் நடித்து வரும் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக இருக்கு பிரமாண்ட திரைப்படம் சலார். இது இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்.
இந்நிலையில் இப்படத்தின் முதல் காட்சியைப் பார்க்கும் டிக்கெட்டை, ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் ராஜமௌலி பெற்றார். அந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படங்களைப் பகிர்ந்து சலாரின் தயாரிப்பாளர்கள்,தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளனர்.
இந்நிகழ்வின்போது இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பிரவுன் நிற சட்டை அணிந்து சலார் அணியுடன் சிரித்துக்கொண்டிருந்தார். பிருத்விராஜும் கருப்புச்சட்டையில் அழகாகத் தோன்ற, புகைப்படத்திற்காகப் புன்னகைத்தார். பிரபாஸ் வெள்ளை நிற வி-நெக் சட்டையில் அவருக்கு அருகில் நின்றிருந்தார். மேலும் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தினரும் இந்நிகழ்வில் உடன் இருந்தனர்.
இதுகுறித்து ஹோம்பேல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சமூக வலைதளப்பதிவில், "ஹைதராபாத்தில் #SalaarCeaseFire-ன் முதல் டிக்கெட்டை இயக்குநர் ராஜமெளலி வாங்கினார்" என்பதாகும்.
ரசிகர்களின் எதிர்வினைகள்:
இப்புகைப்படத்தைப் பார்த்துவிட்டு ஒரு ரசிகர், "தியேட்டர்களில் சலார் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்!" என்றார். மற்றொருவர், "பிரபாஸ் மீது ராஜமெளலியின் நிபந்தனையற்ற அன்பும் மரியாதையும் விலைமதிப்பற்றது"எனப் பாராட்டினார். மேலும் இன்னொரு ரசிகர், ''ராஜமௌலியின் பிரமாண்டமான படமான பாகுபலியில் பிரபாஸ் டைட்டில் கேரக்டரில் நடித்தார். இந்த பிளாக்பஸ்டர் வெற்றிக்காக காத்திருக்கிறேன்" என்று மற்றொரு ரசிகர் கூறினார்.
சலார் பற்றி பிருத்விராஜ் அளித்த பேட்டி:
சமீபத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் , பிருத்விராஜ் சலார் பற்றி மனம் திறந்து கூறினார், "பிரஷாந்த் நீல் (இயக்குநர்), கேஜிஎஃப் 2 படப்பிடிப்பில் இருந்தபோது என்னிடம் கதை சொன்னார். அவர் என்னை வரதாவாக கற்பனை செய்ததற்காக நான் மகிழ்ச்சியடைந்தேன். சமீபகாலங்களில், நான் படித்த சிறந்த ஸ்கிரிப்ட்களில் இதுவும் ஒன்று. நான் நம்பிக்கையின் பாய்ச்சலை எடுத்தேன். அது பலனளித்தது என்று நம்புகிறேன். ஏனென்றால் உங்கள் உள்ளீடு மதிப்புமிக்கது என்று நம்பினால் முழு ஷாட்டையும் மாற்றும் ஒரு வகையான இயக்குனர் பிரசாந்த். அவர் என்னை உருவாக்கினார். ஒரு கூட்டுப்பணியாளர் போல் உணரவைத்தார். இது எனக்கு படத்திற்கிடையே மிகவும் மகிழ்ச்சியான பகுதியாக இருக்கும்" என்றார். இந்நிலையில் கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சலார் டிசம்பர் 22 அன்று திரைக்கு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.