தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Spb Daughter Pallavi: அவர் யாருக்கு என்ன செய்தார்?… அவ்வளவு கஷ்டப்பட்டு ஏன்..? - எஸ்.பி.பி மகள் கண்ணீர்!

SPB Daughter Pallavi: அவர் யாருக்கு என்ன செய்தார்?… அவ்வளவு கஷ்டப்பட்டு ஏன்..? - எஸ்.பி.பி மகள் கண்ணீர்!

Feb 14, 2024, 06:58 AM IST

google News
அவர் ஏதோ ஒரு ஊரில் இருந்து கொண்டிருக்கிறார் என்று நினைத்துதான் நான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் அவரைப் பற்றி ஆழமாக யோசித்தாலே நான் நொறுங்கி விடுவேன். - பல்லவி!
அவர் ஏதோ ஒரு ஊரில் இருந்து கொண்டிருக்கிறார் என்று நினைத்துதான் நான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் அவரைப் பற்றி ஆழமாக யோசித்தாலே நான் நொறுங்கி விடுவேன். - பல்லவி!

அவர் ஏதோ ஒரு ஊரில் இருந்து கொண்டிருக்கிறார் என்று நினைத்துதான் நான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் அவரைப் பற்றி ஆழமாக யோசித்தாலே நான் நொறுங்கி விடுவேன். - பல்லவி!

இசைத்துறையில் மிகப்பெரிய ஆளுமையாக வலம் வந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். பலருக்கும் பிடித்த பாடகராக வலம் வந்த இவர் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 16 மொழிகளில் பாடல்களை பாடியிருக்கிறார்.

இன்னொரு பக்கம் நடிகராகவும் களமிறங்கிய எஸ்.பி.பி அதிலும் தன்னுடைய முத்திரையை பதித்தார். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், செப்டம்பர் 25ம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில் அந்த இழப்பு குறித்து பால சுப்ரமணியத்தின் மகளான பல்லவி பேசி அவள் விகடன் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, “கொரோனா நேரத்தில் அவரை ஹைதராபாத்திற்கு செல்ல வேண்டாம் என்று சொல்லாமல் இருந்தது என்னுடைய மிகப்பெரிய தவறாக நினைக்கிறேன். என்னுடைய அம்மாவும் அவ்வளவு சொன்னார். அவர் கேட்கவே இல்லை. காரணம் என்னவென்றால் அங்கு இருந்துதான் அவருக்கு கொரோனா பரவியது. 

ஒரு வேளை நான் சொல்லியிருந்தால் அவர் சென்றிருக்க மாட்டாரா? என்று எண்ணம் எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கிறது. அவர் தற்போது சென்று விட்டார். நாங்கள் இந்த பயணத்தை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டோம். 

எல்லோரும் எஸ்பிபி நம்மை விட்டு செல்லவில்லை.அவர் பாடல்கள் வழியாக நம்மோடு தான் இருக்கிறார் என்று சொல்வார்கள். அதை பார்க்கும் பொழுது எஸ்பிபி எங்களுடன் உங்களை விட சற்று கூடுதல் சதவீதத்தோடு இருப்பதாக நினைத்துக் கொள்வேன். 

அவர் ஏதோ ஒரு ஊரில் இருந்து கொண்டிருக்கிறார் என்று நினைத்துதான் நான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் அவரைப் பற்றி ஆழமாக யோசித்தாலே நான் நொறுங்கி விடுவேன். 

அவரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் மருத்துவமனையில் அவர் இருந்த தருணங்கள்தான் கண்முன்னே வந்து கொண்டிருக்கிறது. அவருக்கு அப்படி நடந்திருக்க வேண்டாமே… அவர் அந்தளவு கஷ்டப்பட்டு இறக்கும் அளவிற்கு யாருக்க் என்ன செய்தார் என்பது தெரியவில்லை.” என்று பேசினார்.

 

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி