தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Jaishankar Death Anniversary: Friday நாயகன், தென்னகத்து ஜேஸ்பாண்டு! Gentleman என பெயரெடுத்த மகா கலைஞன்

Actor Jaishankar Death Anniversary: Friday நாயகன், தென்னகத்து ஜேஸ்பாண்டு! Gentleman என பெயரெடுத்த மகா கலைஞன்

Jun 03, 2023, 08:30 AM IST

google News
எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்றொருக்கு இணையாக மக்கள் அதிகம் கொண்டாடிய நடிகராக இருந்தவர் ஜெய்சங்கர். இதனாலேயே மக்கள் கலைஞர் என அழைக்கப்பட்ட அவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தனது படங்களை ரிலீஸ் செய்யும் அளவில் பிஸியான நடிகராக வலம் வந்தார்.
எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்றொருக்கு இணையாக மக்கள் அதிகம் கொண்டாடிய நடிகராக இருந்தவர் ஜெய்சங்கர். இதனாலேயே மக்கள் கலைஞர் என அழைக்கப்பட்ட அவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தனது படங்களை ரிலீஸ் செய்யும் அளவில் பிஸியான நடிகராக வலம் வந்தார்.

எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்றொருக்கு இணையாக மக்கள் அதிகம் கொண்டாடிய நடிகராக இருந்தவர் ஜெய்சங்கர். இதனாலேயே மக்கள் கலைஞர் என அழைக்கப்பட்ட அவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தனது படங்களை ரிலீஸ் செய்யும் அளவில் பிஸியான நடிகராக வலம் வந்தார்.

தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா ஹீரோக்களில் ஒருவரான ஜெய்சங்கர், தனித்துவமான நடிப்பால் மட்டுல்லமாமல் மற்ற ஹீரோக்களை போல் அல்லாமல் தனித்துவமான சினிமாக்களிலும் தோன்றி மக்களை மகிழ்வித்தார். ஒரு படம் மக்களை சென்றடைய வேண்டுமானால் படத்தின் கதை, திரைக்கதை சிறப்பாக அமைவதோடு மட்டுமல்லாமல் காதல், காமெடி, சண்டைக்காட்சிகள் உள்பட ஜனரஞ்சகமான விஷயங்களும் இருக்க வேண்டும்.

இதை நன்கு அறிந்த எம்ஜிஆர், சிவாஜி கணேசன் அந்த பார்முலாவை நன்கு பயன்படுத்தினர். இவர்களை பின்பற்றி ஜெமினி கணேசன், முத்துராமன், ரவிச்சந்திரன் போன்றோர் இமிடேட் செய்ய, ஜெய்சங்கரோ இதிலிருந்து மாறுபட்ட தனக்கு தனியொரு பாதை அமைத்து கொண்டார்.

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன், த்ரில்லர் சினிமாக்கள் அதிகம் வெளிவருவதற்கு தொடக்க புள்ளியாக இருந்ததில் ஒருவராக ஜெய்சங்கர் இருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. அற்புதமான சண்டை காட்சிகள், சஸ்பென்ஸ் த்ரில்லருடன் கூடிய படமாக ஜெய்சங்கரின் படங்கள் இருக்கும்.

வழக்கறிஞர் குடும்பத்தை சேர்ந்த ஜெய்சங்கரை, பெரிய வழக்கறிஞர் ஆக்க வேண்டும் என்பது தந்தையின் ஆசை, ஆனால் கல்லூரி காலம் முதலே நடிப்பில் மீது ஆர்வம் கொண்ட இவர் தனது நடிப்பு திறமையை மேடை நாடகங்களில் வளர்த்து கொண்டார்.

சினிமா கம்பெனிகளுக்கு நடையாய் நடந்தார் இயக்குநர் ஜோஸப் தளியத் இயக்கிய இரவும் பகலும் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். முதல் படத்திலேயே இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. அத்துடன் முதல் படத்திலேயே டபுள் ரோலில் நடித்த நடிகராக ஜெய்சங்கர் இருந்துள்ளார்.

ஆரம்பத்தில் தன்னை நிலைநிறுத்திகொள்ள மற்ற ஹீரோக்களை போல் குடும்பபாங்கான கதைகளான பஞ்சவர்னகிளி, குழந்தையும் தெய்வமும் போன்ற படங்களில் நடித்த ஜெய்சங்கர் பின்னர் தனக்கான பாதையை வகுத்து கொண்டார்.

வல்லவன் ஒருவன், சிஐடி சங்கர் போன்ற ஆக்‌ஷன் படங்களில் தோன்றினார். அதுவரை தமிழ் சினிமாவில் இருந்த கத்தி சண்டை, குஸ்தி போன்று இருந்த ஆக்‌ஷன் காட்சிகளுக்கு மாறாக கோட் சூட் போட்டுக்கொண்டு, துப்பாக்கியுடன் சண்டையில் ஈடுபட்டு ரசிகர்களுக்கு முதல் முறையாக புதுமையான அனுபவத்தை கொடுத்தார். இதன்காரணமாக ரசிகர்கள் இவரை தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்றே அழைத்தார்கள்.

இதன் மூலம் ஈர்க்கப்பட்ட எம்ஜிஆர், சிவாஜி கணேசன் கூட தங்களது வழக்கமான பாணியை விட்டுவிட்டு ஜெயசங்கருக்கு போட்டியாக ஆக்‌ஷன் கோதாவில் களமிறங்கினர்.

ஆக்‌ஷன் படங்களில் பிரதானமாக நடித்தாலும், பொம்மலாட்டம், வரவேற்பு, பூவா தலையா, பட்டணத்தில் பூதம் போன்ற காமெடி படங்களில் நடித்தார். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் கால்ஷீட் கிடைக்காதவர்கள் அடுத்த அப்ரோச் செய்யும் ஹீரோவாக ஜெயசங்கர்தான் இருந்தார். இதனால் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் ஜெய்சங்கர் படம் ரிலீஸ் ஆகும் சூழல் உருவானது.

பாலசந்தர் இயக்கிய நூற்றுக்கு நூறு படத்தில் அற்புதமான நடிப்பால் முத்திரை பதித்திருப்பார்.

என்னதான் தொடர் ஹிட்கள் கொடுத்தாலும் சம்பளத்தை பெரிதாக உயர்த்தாமலும், ஷுட்டிங் ஸ்பாட்டில் நன்கு ஒத்துழைப்பு கொடுக்கு நடிகராகவும் இருந்து வந்த ஜெயசங்கர். சினிமாவுக்குள் இப்படி என்றால் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் தன்னால் முடிந்த உதவிகளை கேட்பவர்களுக்கும், தேவைப்படுபவர்களுக்கும் சத்தமில்லாமல் செய்ததால் ஜெண்டில்மேன் என பெயரெடுத்தார்.

தனக்கென்று கொடி பிடிக்க ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்திராத இவர், திரையுலகிலும் வெளியுலகிலும் நல்ல பெயரையும், நண்பர்கள் கூட்டத்தையும் சம்பாதித்தவராக இருந்துள்ளார். மருத்துவ ட்ரஸ்ட் ஒன்றை வைத்து அதன் மூலம் பலருக்கு சிகிச்சையும் அளித்து வந்துள்ளார்.

பட்ஜெட் படங்கள் மூலம் தயாரிப்பாளர்களுக்கு வெற்றி படங்களையும், அமோக லாபத்தையும் பெற்று தந்த இவர் ரஜினி, கமல் போன்ற இளம் ஹீரோக்களின் வருகைக்கு பிறகு குணச்சித்தரம், வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தார். ரஜினியுடன் முரட்டுகாளை, கமலுடன் அபூர்வ சகோதரர்கள், ஊமை விழிகள் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தோன்றி முத்திரை பதித்தார்.

ஜெய்சங்கர் என்ற தனது பெயரில் ஜெய், சங்கர் போன்ற பெயருடன் கூடிய கதாபாத்திரங்களில் தமிழ் சினிமாவில் அதிகம் நடித்த நடிகராக இவர் உள்ளார். 2000ஆவது ஆண்டில் தனது 61வது வயதில் நெஞ்சுவலி ஏற்பட்டு நடிகர் ஜெய்சங்கர் மறைந்தார்.

இறப்பதற்கு முன்பு வரையிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்ததுடன், தனது சமூக பணிகளையும் தொடர்ந்து வந்த ஜெய்சங்கரின் 23வது நினைவு நாள் இன்று.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி