Sivakarthikeyan: விஜய் ரஜினி இடத்திற்கு டார்கெட்? விமர்சனத்திற்கு முற்று புள்ளி வைக்கிறார் SK - செய்யாறு பாலு விளக்கம்
Mar 14, 2024, 09:09 AM IST
Sivakarthikeyan Fans Meet:
Sivakarthikeyan Fans Meet: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவர் சமீபத்தில் தனது ரசிகர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி உள்ளார். சென்னை தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல பகுதியில் இருந்து சிவகார்த்திகேயனின் நற்பணி மன்ற நிர்வாகிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
500க்கும் மேற்பட்டவர்கள் அந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் "சினிமாவில் நான் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன். அதை பகிர்ந்து கொள்ள எனக்கு தந்தையோ, சகோதரரோ கிடையாது. ரசிகர்களாகிய நீங்கள் தான் என்னுடன் இருககிறீர்கள். எப்போதும் இருப்பீர்கள்" என்று பேசினார்.
சிவகார்த்திகேயனின் இந்த நிகழ்ச்சி கோடம்பாக்கத்தின் பேசுபொருளாக மாறி உள்ளது. விஜய், ரஜினி போன்ற உச்ச நட்சத்திரங்களின் பாணியில் ரசிகர்களுடன் சந்திப்பு கூட்டம் போன்று திட்டமிட்டு சிவகார்த்திகேயன் நடத்தி உள்ளதாக விமர்சனங்களும் எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆகாயம் யூடியூப் சேனலுக்கு சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு நேர்காணலில் பேசினார்.
அதில் சினிமாவில் இருந்த விஜய் அரசியலுக்கு போகும் போது அங்கு ஏற்படும் வெற்றிடத்தை சிவகார்த்திகேயன் நிரப்புவார் என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும் அவரது ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மூலம் ரஜினி, விஜய்யின் இடம் தனக்குதான் என்று முடிவு செய்து விட்டாரா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு சினிமாவில் என்ன மேஜிக் வேண்டுமானாலும் நடக்கும். சிவகார்த்திகேயனும் அப்படி மேஜிக் நடந்துதான் வந்தார். விஜய்யின் இடம் வெற்றிடம்தான். விஜய் மீண்டும் நடிக்க வந்து விடுவார். தமிழக வெற்றிக் கழகம் எல்லாம் எதுவும் இல்லை என்று சிலர் எதிர்பார்க்கின்றனர். விஜய் ரசிகர்களே ஒரு சில பேர் தளபதி பெரிய வெற்றி எல்லாம் பெற கூடாது. அவர் மீண்டும் நடிக்க வந்து விட வேண்டும். நாங்க அவர் படத்துக்கு தியேட்டர் முன்னாடி வந்து பேனர் கட்ட முடில. நாங்க எல்லாம் என்ன பண்றது போன்ற விமர்சனங்கள் உள்ளது. மறுபுறம் அவர் ஒரு செயலி வெளியிடுறார். அது ஹேங் ஆகிறது. 49 வயது 69 ஆவது படம் வரி பிடித்தம்போக ஒரு படத்திற்கு 165 கோடியாவது குடுப்பாங்க. இந்த மாதிரியான இடத்தில் இருக்கும் நபருக்கு எல்லாத்தையும் தூக்கி போட்டு வர ஒரு தனி துணிச்சல் வேண்டும். விஜய் வந்து விட்டார். விஜய்யோட இடம் வெற்றிடம் தான் திரையில்.
அந்த இடத்தை சிவகார்த்திகேயன் டார்கெட் பண்ணிட்டார். அதனுடைய வெளிப்பாடுதான் இந்த ரசிகர்கள் சந்திப்பு.
ஆனால் சிவகார்த்தி கேயன் விஜய் இடத்தை பிடிப்பதற்கே இன்னும் டைம் எடுக்கும். ஆனால் அந்த இடத்திற்கு போய் விடுவார். ஏனென்றால் போட்டிக்கு அங்கு ஆள் இல்லை. ஆனால் ரஜினியின் இடத்தை பிடிக்க சாத்தியமில்லை. அது ரொம்ப காலம் ஆகும்.
ஆனால் விஜய் இடத்தை பிடிக்க சிவகார்த்தி கேயன் ரொம்ப தெளிவாக திட்டமிட்டு ஸ்கெட்ச் போட்டு போய் கொண்டு இருக்கிறார்.
மேலும் சிவகார்த்திகேயனின் நற்பணி மன்றமும் அப்படியே அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் சிவகார்த்திகேயன் திடுதிப்பென அரசியலுக்குள் வந்துவிட மாட்டார்.
ஆனால் சிவகார்த்திகேயன் மிக தெளிவான புத்திசாலியான நடிகர். விஜய் மாதிரியான துணிச்சலான முடிவை எடுக்க மாட்டார். ஆனால் இப்போதே அரசியலுக்கான அச்சாரம் போட்டு வைக்கிறார்.
ஆனால் அவருடைய நோக்கம் விஜய்யின் இடம் தான் சமீபகாலமாக சிவகார்த்திகேயன் மீது வந்த விமர்சனங்களுக்கு எல்லாம் முற்றுபுள்ளி வைப்பதாற்கான விதமாகதான் பேன்ஸ் மீட்டை நடத்திக் காட்டி உள்ளார் என்பது உள்ளிட்ட பல கருத்துகளை தெரிவித்துள்ளார்.
நன்றி: Aagayam Tamil
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9