தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ayalaan Trailer: ஏலியன் ஓகே.. ஆனா கதை.. சயின்ஸ் ஃபிக்‌ஷன் பிரமாண்டம்.. அயலான் ட்ரெய்லர் எப்படி?

Ayalaan Trailer: ஏலியன் ஓகே.. ஆனா கதை.. சயின்ஸ் ஃபிக்‌ஷன் பிரமாண்டம்.. அயலான் ட்ரெய்லர் எப்படி?

Jan 05, 2024, 08:53 PM IST

google News
இப்படத்தில், சுமார் 4500க்கும் மேற்பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகளைக் கொண்டு காட்சிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக இருக்கும் அயலான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் திரைப்படம் வரவேற்பை பெற்றது.

இவரிடம் 2018-ம் ஆண்டு ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் கதை சொல்லி, அயலான் படம் ஆரம்பம் ஆனது. சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகி வந்த இந்தத்திரைப்படம் கொரோனா ஊரடங்கு மற்றும் கிராஃபிக்ஸ் பணிகள் காரணமாக பல வருடங்களாக போஸ்ட் புரொடக்‌ஷனிலேயே இருந்தது.

இப்படத்தில், சுமார் 4500க்கும் மேற்பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகளைக் கொண்டு காட்சிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரங்களில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து, ரகுல் ப்ரீத் சிங், இஷா கோப்பிகர், ஷரத் கேல்கர், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்தப்படத்தின் ட்ரெய்லர்  தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. 

ட்ரெய்லரை  பார்க்கும் போது,  நிச்சயம் இந்தப்படம் குழந்தைகளுக்கு பிடித்த படமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. கிராஃபிக்ஸ் காட்சிகளும், பிரமாண்டமும் படத்தையும் சரி, சிவாவின் கேரியரையும் சரி, அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று நம்பலாம். பாடல்கள் பெரிதாக கவனம் ஈர்க்காத நிலையில், பின்னணி இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் ஓரளவிற்கு மெனக்கெட்டு இருக்கிறார். சிவகார்த்திகேயன், ஏலியன், யோகிபாபு தொடர்பான காமெடிகள் ரசிக்கும் படியாக இருக்கும் என்று தெரிகிறது. 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி