"நான் சின்ன தளபதியா.. பேசாம இரும்மா கொஞ்சம்...விஜய் சீனியர் நடிகர்.. அத அப்படித்தான் பார்க்கணும்" -சிவகார்த்திகேயன்
Oct 31, 2024, 03:02 PM IST
பத்திரிகையாளர் சந்திப்பில் நீங்கள் சின்ன தளபதியா என்ற கேள்வி முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கு சிவகார்த்திகேயன் பதில் கொடுத்து இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் அமரன். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முதன்முறையாக சாய் பல்லவி நடித்திருக்கிறார்.
போரில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார் இந்த திரைப்படத்தை இன்று சிவகார்த்திகேயன் ரசிகர்களோடு அமர்ந்து பார்த்தார் அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசும்பொழுது, "முதல்வரும் துணை முதல்வரும் அமரன் படத்தை பற்றி கேள்விப்பட்டு,படத்தை பார்க்க வேண்டும் என்று கூறினார்கள். அவர்களுக்காக பிரத்யேகமாக காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
படத்தை பாராட்டினார்கள்
படத்தை பார்த்த அவர்கள் மிகவும் எமோஷனலாக படம் மிகவும் நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். குறிப்பாக முதல்வர், நம் ஊரில் இருந்து ஒரு வீரன் ராணுவத்திற்கு சென்று, இப்படி ஒரு சாதனையை செய்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார். அதற்காகத்தான் நான் இந்த படத்தையே பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் என்று கூறினார்.
படத்தில் நடித்த எல்லோரையும் அவர் மனமார பாராட்டினார். அவர் நேரம் ஒதுக்கி எங்களுடைய படம் பார்த்தது என்பது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. திரைப்படத்தை பார்த்த கமல் சார்,நாம் நல்ல படத்தை எடுத்திருக்கிறோம் என்று கூறினார் அதை ரசிகர்கள் வாயால் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் இன்று ரசிகர்களோடு சேர்ந்து படம் பார்த்தேன். இது திரைப்படம் கிடையாது. மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் இந்து ஆகிய இரண்டு பேரின் வாழ்க்கை தான் இந்த திரைப்படம். அதை நாங்கள் சரியாக பதிவு செய்திருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
படத்தில் நிறைய இடங்களில் மக்கள் கைதட்டினார்கள். அது அந்த கதாபாத்திரத்திற்கு கிடைத்த கைத்தட்டல்கள் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் இந்த திரைப்படத்தை தைரியமாக வந்து பார்க்கலாம். இது உங்களுக்கு ஒரு உத்வேகம் தரக்கூடிய திரைப்படமாக நிச்சயம் இருக்கும். இந்த திரைப்படம் ராணுவத்தில் இருக்கக்கூடிய ராணுவ வீரர்களையும், அவர்களது குடும்பத்தையும் கொண்டாடும் திரைப்படமாக இருக்கும்.
அதேபோல கொரோனா சமயத்தில் தன்னலம் இல்லாமல் முன்வந்து பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கும் இந்த திரைப்படம் ஒரு மிகப்பெரிய அர்ப்பணிப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
இந்தத் திரைப்படத்தை குழந்தைகள் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்; காரணம் என்னவென்றால், குழந்தைகளுக்கு நாம் தற்போது நிறைய சூப்பர் ஹீரோ கதைகளை சொல்கிறோம். ஆனால்,.நம் ஊரில் இருந்து சென்று நமது தேசத்தை காப்பாற்ற தன்னுடைய உயிரையே தியாகம் செய்த ஒரு சூப்பர் ஹீரோவின் உண்மையான கதை தான்
இந்த திரைப்படம். ஆகையால் இந்த திரைப்படம் அவர்களுக்கு நிச்சயமாக ஒரு உத்வேகம் தரக்கூடிய திரைப்படமாக இருக்கும்." என்று பேசினார்.
அது ஒரு அழகான நிகழ்வு
நீங்கள் விஜய் சார் எனக்கு துப்பாக்கி கொடுத்தது பற்றி கேள்வி கேட்கிறீர்கள்? அதை நான் திரைப்படத்தில் நடந்த வழக்கமான நிகழ்வாக மட்டுமே பார்க்கிறேன். ஒரு சீனியர் நடிகர், அவருடன் சேர்ந்த இன்னொரு நடிகருடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.அதில் அவ்வளவு தான் இருக்கிறது. நான் சினிமாவில் இன்னும் செய்ய வேண்டிய சாதிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன" என்று பேசினார்.
டாபிக்ஸ்