Siva Karthikeyan: எதிரே நிறுவனம் போட்ட சிவா; கடுப்பான தனுஷ்.. முதுகில் குத்திய அட்லீ.. - சிவா கடந்த முள் பாதை!
Jul 12, 2023, 06:57 AM IST
சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகள் குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பகிர்ந்த தகவல்கள் இது!
சிவகார்த்திகேயனின் திறமையை பார்த்து முதலில் இயக்குநர் பாண்டிராஜ் தான் மெரினா படத்தின் கதையை சிவாவிடம் சொன்னார். ஆனால் அந்த படத்திற்கு அப்பொழுது தயாரிப்பாளர் கிடைக்காமல் பாண்டிராஜ் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் தான் சிவகார்த்திகேயனை நெடுநாளாக கவனித்துக் கொண்டிருந்தார் நடிகர் தனுஷ். இதனிடையே அவர் தன்னுடைய மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான 3 படத்திற்காக நடிகர் சந்தானத்தை கேட்டிருக்கிறார். நடிகர் சந்தானம் தனுஷ் படத்தில் நடிக்க மறுக்கவே அவர் சிவகார்த்திகேயனை அந்த திரைப்படத்தில் கமிட் செய்தார். இந்த நிலையில் தான் சிவகார்த்திகேயனுக்கும் தனுஷூக்கும் இடையே ஒரு கட்டத்தில் சில மனக்கசப்புகள் நிகழ்ந்தன. இதில் நடிகர் தனுஷ் அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் அனிருத்தும் சிவகார்த்திகேயன் பக்கம் சென்று விட்டார். இந்த உரசலுக்கு தனுஷ் வைத்திருந்த தயாரிப்பு நிறுவனமான வொண்டர் பார் நிறுவனத்திற்கு எதிராகவே சிவகார்த்திகேயன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான எஸ் கே புரொடக்ஷனை வைத்ததே காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பார்த்து சினிமாவே பொறாமை கொள்கிறது. திடீரென்று ஒருத்தன் இப்படி வளர்ந்தால் எப்படி அவர்களால் அதை ஒத்துக் கொள்ள முடியும். இதனால் சிவா மீது பல கட்ட விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்த நிலையில் தான் ஒரு சினிமா பின்னணி உள்ள ஒரு தயாரிப்பு நிறுவனம் சிவகார்த்திகேயனை கூப்பிட்டு நான்கு படங்கள் செய்வதற்கான அட்வான்ஸ் தொகையை கொடுத்து நாம் படம் செய்யலாம் என்று கையெழுத்து வாங்கியது.
ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்படியே அவர்கள் அழுத்தம் கொடுத்து வேறு எந்த படத்திலும் கமிட்டாகாத வகையில் பார்த்துக் கொண்டார்கள். இதனால் பிற தயாரிப்பாளர்கள் சிவகார்த்திகேயனிடம் வரும் பொழுது சிவகார்த்திகேயன் நான் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனத்தில் கமிட் ஆகிறேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.
அதன் பின்னர் தான் அது சிவகார்த்திகேயனுக்கு விதிக்கப்பட்ட சூழ்ச்சி என்பது அவருக்கு தெரிய வருகிறது. தான் வாங்கிய அட்வான்ஸ் தொகை அனைத்தையும் திரும்பத் தருகிறேன் ஒப்பந்தத்தை தயவுசெய்து ரத்து செய்து கொள்ளலாம் என்று சிவகார்த்திகேயன் கூறிய போது கூட தயாரிப்பாளர் தரப்பு அதற்கு சுத்தமாக ஒத்து வரவில்லை. முடியவே முடியாது என்று ஒற்றை காலில் நின்று ஒப்பந்தம் போட்டது போட்டது தான் நீங்கள் நடித்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் போல சினிமாவில் வளர்ந்தவர்கள் அவருக்கு உதவ முன் வந்தனர். எதிர் தரப்பை அவர்கள் ஆப் செய்தனர். எப்பவுமே ஒருவன் வளர்கிறான் என்றால் அவனது வளர்ச்சியாரை நம்மால் தாமதப்படுத்த முடியும் ஆனால் அதை தடுக்க முடியாது.
ஒரு திரைப்படம் ரெடி ஆகிறது. அந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தான் ஹீரோ என்று கூறுவர் வாக்குறுதி அளித்து விட்டார். இதை நம்பி அவர் வேறு எந்த படத்தையும் ஒப்பந்தம் செய்யாமல் இருந்தார். ஆனால் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு இறுதி கட்டத்தில் இவர் பெயருக்கு பதிலாக வேறு நடிகரின் பெயர் இருந்தது இதை பார்த்த சிவகார்த்திகேயன் மிகவும் நொந்துவிட்டார். அப்படி சிவகார்த்திகேயனை ஏமாற்றிய அந்த நபர் வேறு யாருமில்லை ஷங்கரின் உதவியாளராக இருந்து ராஜா ராணி திரைப்படம் இயக்கிய ரஅட்லி தான். அந்த திரைப்படம் ராஜா ராணி திரைப்படம் தான்” என்று பேசினார்.
டாபிக்ஸ்