Vaikom Vijayalakshmi: ‘வக்கிரம் பிடித்த கணவரால் வாழ்க்கை போச்சு’ -விஜயலட்சுமி
Jan 03, 2023, 06:25 AM IST
Vaikom Vijayalakshmi Interview: ‘நான் என்ன செய்தாலும் என்னுடைய நெகட்டிவ் மட்டும் தான் கூறுவார் என் கணவர். நான் எது செய்தாலும் அவருக்கு பிடிக்காது. நான் பாடுவதே அவருக்கு பிடிக்காது’ -வைக்கம் விஜயலட்சுமி பேட்டி!
பார்வை குறைபாடை கடந்து சிறந்த பாடகியாக திகழ்பவர் வைக்கம் விஜயலட்சுமி. சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தன் மோசமான குடும்ப வாழ்க்கை குறித்து தெரிவித்துள்ளார். இதோ அந்த பேட்டி:
‘‘1981 அக்டோபர் 7 ம் தேதி விஜயதசமி அன்று நான் பிறந்தேன். கேரளாவில் வைக்கம் என்கிற ஊர் தான் என்னுடைய ஊர். அதனால் வைக்கம் விஜயலட்சுமி என்று பெயர். வைக்கத்தில் நிறைய இசைக்கலைஞர்கள், கலைஞர்கள் உள்ளனர். அங்கு பிறந்ததை நான் பாக்கியமாக நினைக்கிறேன்.
சென்னையில் 5 ஆண்டுகள் இருந்தேன். அங்கு அப்பா எலக்ட்ரிக் கடை வைத்திருந்தார் . சிறு வயதிலேயே இசை மீது ஆர்வம். கேசட் மூலம் பாடல்கள் கேட்டு இசையை கற்றுக்கொண்டேன். ஆறு வயதில் ஜேசுதாஸ் சாருக்கு குருதட்சணை கொடுத்து இசைப் பயணம் தொடங்கியது.
அப்பாவும், அம்மாவும் என்னை எப்போதும் பாசிட்டிவாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள். வாழ்க்கையில் எல்லாமே இருக்கும் தானே. சோகமாக இருக்க கூடாது என்று என்னை சமாதானப்படுத்தியே நான் இப்படி ஆகிவிட்டேன். கஷ்டமான சூழல் வந்தால் பாடல் கேட்பேன். சந்தோசமாக இருக்கும் போது சித்ரா பாடிய நின்னுக்கோரி வரணும் பாடலை தான் கேட்பேன்.
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே பாடலை, சோகமாக இருக்கும் போது கேட்பேன். ராஜா கைய வெச்சா இது ராங்கா போனதில்லை பாடலை, துடிப்போடு இருக்க பாடுவேன்.
வாழ்க்கையில் காதல் முக்கியம். கருணையான பாசம் இருக்க வேண்டும். நடிக்கிற காதல் வேண்டாம். பேசும் போது, பார்க்கும் போது தெரிந்து விடும் உண்மையான காதல், போலியான காதல் எது என்று. மனதால் ஒரு காதலை புரிந்து கொள்ள வேண்டும்.
நான் என்ன செய்தாலும் என்னுடைய நெகட்டிவ் மட்டும் தான் கூறுவார் என் கணவர். நான் எது செய்தாலும் அவருக்கு பிடிக்காது. நான் பாடுவதே அவருக்கு பிடிக்காது. நான் பாடலை தொடருவதும் அவருக்கு பிடிக்காது. அவர் அப்படி ஒரு கேரக்டர். அவர் ஒரு வக்கிரம் பிடித்த கொடூரன்.
அப்பாவையும், அம்மாவையும் என்னிடம் இருந்து பிரித்தார். ‘எல்லாம் தெரிந்து தானே திருமணம் செய்தீர்கள்’ என்று கேட்டேன். கடைசியில் இனி இவருடன் வாழ முடியாது என முடிவுக்கு வந்தேன். இவ்வளவு சமாளித்து வாழ வேண்டுமா என தோன்றியது. சங்கீதம் தான் எனக்கு சந்தோசம். அது இல்லாதவரிடம் எப்படி வாழ முடியும்? அப்படி என்ன சமாளித்து வாழ வேண்டும்? வந்துவிட்டேன்.
என் அம்மா முதலில் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப்பாரு என்று சொன்னார். அப்படி தான் எல்லா அம்மாவும் சொல்வாங்க. விவாகரத்து மிகவும் ஈஸி, ஆனால் வாழ்வது கஷ்டம் என்று என் அம்மா கூறினார். என்னுடைய சுதந்திரம் என்னுடையது; அதை வேறு யாரும் கொடுக்க வேண்டியதில்லை,’’
என்று அந்த பேட்டியில் வைக்கம் விஜயலட்சுமி கூறியுள்ளார்.
டாபிக்ஸ்