Singappenne: ' உங்க வேலையை பாருங்க' - ஆனந்தியை தொடர்ந்து அவமானம் செய்யும் அன்பு - சிங்கப் பெண்ணே சீரியல்
Oct 03, 2024, 11:21 AM IST
Singappenne: லோன் பணம் கட்ட முடியாமல் தவிக்கும் காயத்ரியின் விஷயம் எப்படியோ மித்ராவுக்கு தெரிந்து போனது. அதனால் அவரிடம் உனக்கு எவ்வளவு பணம் வேண்டும் நான் கொடுக்கிறேன் என்றார்.
Singappenne: சிங்கப் பெண்ணே சீரியலில் இருந்து இன்று ( அக். 3 ) வெளியான புரோமோவில், ஜெயந்தி, ஆனந்தி, சௌந்தர்யா ஆகியோர் அன்பு வீட்டிற்கு சென்றார்கள். அப்போது அன்புவிடம், “ ஜெயந்தி மற்றும் சௌந்தர்யா, நாங்க இரண்டு பேர் மட்டும் இல்லாமல் ஆனந்தியுடன் உன்னிடம் பேச வந்து இருக்கிறார் என அன்புவிடம் “ சொல்கிறார். அதற்கு அன்பு அதிர்ச்சி அடைந்து என்னது ஆனந்தியும் இங்கே வந்து இருக்கிறாளா? என கேட்டார். அதை அன்புவின் அம்மா கேட்டுவிட்டு கடுப்பாகினார்.
காயத்ரிக்கு உதவி செய்யும் மித்ரா
லோன் பணம் கட்ட முடியாமல் தவிக்கும் காயத்ரியின் விஷயம் எப்படியோ மித்ராவுக்கு தெரிந்து போனது. அதனால் அவரிடம் உனக்கு எவ்வளவு பணம் வேண்டும் நான் கொடுக்கிறேன் என்றார்.
ஆனந்தி வந்து இருப்பதை அறிந்து அன்பு வீட்டிற்கு வெளியே சென்று பேசுகிறார். ஆனந்தி, “ நீங்க தயவு செய்து மீண்டும் வேலைக்கு வந்துடுங்க அன்பு “ என்றார். அன்பு, “ இங்க வந்து எதற்காக நீங்க கெஞ்சிக்கிட்டு இருக்கீங்க. போய் உங்க வேலையை பாருங்க “ என மிகவும் கோபமாக பேசிவிட்டார். இதனால் ஆனந்தியின் மனம் மிகவும் உடைந்துவிட்டது. இது தொடர்பான காட்சிகள் இன்றைய ( அக். 3 ) எபிசோடில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.
நேற்றைய எபிசோட்
காயத்ரியிடம் வங்கியில் வேலை செய்யும் நபர் மீண்டும் வம்பு செய்கிறார். போனில் எதையோ பார்த்துவிட்டு பயந்து போனார் காயத்ரி. அந்த நபருக்கு போன் செய்து, “ ஏன் இப்படி டார்ச்சர் செய்கிறார் “ என்று கேட்டார். அதற்கு அவர் தனக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தால் எல்லாமே சரியாகிவிடும் என்றார்.
மேலும் உஷா, கருணாகரன் கொடுத்த அதிகாரத்தின் காரணமாக அனைவரையும் கேள்வி கேட்கிறார். ஆனந்தியிடம் வம்பு செய்த நிலையில் அவர் முத்துவிடம் கூறினார். முத்துவும் உடனே உஷாவை அழைத்து கண்டித்தார். உடனே கருணாகரன் வந்து அன்பு இடத்தில் உஷா தான் இனிமேல் வேலை பார்ப்பார் என புது குண்டு வீசி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
பத்திரத்தை அடமானம் வைத்து பணம்
அன்பு வேலையை விட்டு சென்றதை ஆனந்தியால் சற்றும் ஏற்று கொள்ளவே முடியவில்லை. அதனால் ஜெயந்தி, சௌந்தர்யாவை அழைத்து கொண்டு அன்பு வீட்டிற்கு சென்றார் ஆனந்தி. ஆனால் உள்ளே சென்று பேச ஆனந்திக்கு சற்று தயக்கம் ஏற்பட்டது. அதனால் ஜெயந்தி, சௌந்தர்யாவிடம், “ நீங்க உள்ளே சென்று பேசுங்கள். நான் பின்னால் வந்து இணைந்து கொள்கிறேன் “ என்றார் ஆனந்தி. இப்படி சூழல் இருக்க அன்புவிடம் வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து பணம் வாங்க முயன்ற விஷயம் தெரியவந்து அவரின் தாய் கேட்கிறார்.
“ வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து 10 லட்சம் ரூபாய் யாருக்கு வாங்கி கொடுக்க போகிறாய்? ஆனந்திக்கு தானே? அந்த அளவிற்கு எப்படி உனக்கு தைரியம் வந்தது? “ என கோபமாக பேசுகிறார். சரியான நேரமாக அப்போது தான் ஜெயந்தி, சௌந்தர்யா, அன்பு வீட்டிற்கு நுழைக்கிறார்கள்.
டாபிக்ஸ்