தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  19 Years Of Manmadhan: Serial Killer, தெறிக்கவிடும் நடிப்பு..! சிம்புவின் சினிமா வாழ்க்கையை புரட்டிபோட்ட மன்மதன்

19 years of Manmadhan: Serial Killer, தெறிக்கவிடும் நடிப்பு..! சிம்புவின் சினிமா வாழ்க்கையை புரட்டிபோட்ட மன்மதன்

Nov 12, 2023, 05:15 AM IST

google News
சிம்புவின் சினிமா கேரியரில் அவருக்கு முதல் ஹிட் கொடுத்த படமாக இருந்ததுடன், அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வேறொரு பாதைக்கு அழைத்து சென்ற படமாக மன்மதன் உள்ளது.
சிம்புவின் சினிமா கேரியரில் அவருக்கு முதல் ஹிட் கொடுத்த படமாக இருந்ததுடன், அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வேறொரு பாதைக்கு அழைத்து சென்ற படமாக மன்மதன் உள்ளது.

சிம்புவின் சினிமா கேரியரில் அவருக்கு முதல் ஹிட் கொடுத்த படமாக இருந்ததுடன், அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வேறொரு பாதைக்கு அழைத்து சென்ற படமாக மன்மதன் உள்ளது.

சிம்பு நடிப்பில் 2004ஆம் ஆண்டில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்து பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளிய ஹிட் படம் உள்ளது மன்மதன். காதல் கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் சிம்பு முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருப்பதுடன், கதை, திரைக்கதையும் இவரே அமைத்திருந்தர்.

வழக்கமாக சில ஹீரோக்கள் தங்களது படங்களில் உதவி இயக்குநர் போல் செயல்பட்டு கதை விவாதம், திரைக்கதை உருவாக்கம், காட்சி உருவாக்கம் போன்றவற்றில் தங்களது பங்களிப்பை அளிப்பது இயல்புதான். அந்த வகையில் மன்மதன் படத்தில் கூடுதல் ஸ்பெஷலாக இயக்குநர் மேற்பார்வை பணியும் சிம்பு மேற்கொண்டார். அதாவது படத்தின் இயக்குநர் ஏ.ஜே. முருகனை மேற்பார்வை செய்யும் பணியை மேற்கொண்டார்.

படத்தில் சிம்பு டபுள் ஆக்டிவ் என்பதை சர்ப்ரைசாகவே வைத்திருந்தார்கள். படம் வெளியான பின்பு இன்னொரு சிம்புவின் ப்ளாஷ்பேக் காட்சிகள் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்திருந்தன. காதல் என்ற பெயரில் ஆண்களை ஏமாற்றும் பெண்களை தேடிப்பிடித்து கொலை செய்யும் சீரியல் கொலைகாரன் இருக்கும் சிம்பு சட்டத்தின் பிடியில் சிக்கினாரா இல்லையா என்பது தான் படத்தின் ஒன்லைன்.

இந்த கதைக்கு சிம்புவின் விறுவிறுப்பான திருப்பங்கள், த்ரில்லர் காட்சிகளுடன் கூடிய திரைக்கதை முக்கியத்துவம் பெற்றவையாக இருந்தன. இது ஒரு புறம் என்றால் நடிப்பு ராட்சசனாக சிம்பு தெறிக்கவிடும் பெர்பார்மென்ஸை கொடுத்திருப்பார்.

காதல், ஆக்‌ஷன், கபடம், வில்லத்தனம் என ஒரு கேரக்டரிலும், வெகுளித்தனம், ஏமாற்றம் என மற்றொரு கதாபாத்திரத்தில் தோன்றி தனது அற்புதமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பார். படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக வரும் ஜோதிகா தோற்றத்தில் பப்ளியாக இருந்தது போல் நடிப்பிலும் குறும்புத்தனம், சீரியஸ்னஸ் என வெரைட் காட்டியிருப்பார்.

படத்தின் ரிச்னஸை கூட்டும் விதமாக அந்த காலகட்டத்தில் ட்ரெண்டிங்கில் இருந்த பெண்மணிகளான மந்திரா பேடி, யானா குப்தா போன்றோரையும் கெஸ்ட் கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுத்திருப்பார்கள்.

சிம்பு என்றாலே விரலை வைத்து ஏதாவது ஸ்டைலோ, வித்தையோ காட்டக்கூடியவர் என்று இருந்த பெயரை புதுமையான மேனரிசம், தோற்றம், நடிப்பு மூலம் மன்மதன் மாற்றியமைத்து. அந்த வகையில் சிம்பு சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக இது அமைந்துள்ளது. மன்மதன் படத்துக்கு முன், பின் என சிம்புவை பிரிக்கும் விதமாக அவரது சினிமா கேரியரை புரட்டி போட்டது இந்தப் படம்.

வாலி, சிநேகன், நா. முத்துக்குமார், பா. விஜய் பாடல் வரிகளுக்கு யுவன் ஷங்கர் இசையமைப்பில் அனைத்து பாடல்களும் ஹிட்டாக சிறந்த பாடல்களாக அமைந்தன. படத்தின் பின்னணி இசை, தீம் மியூசிக்கும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

2004ஆம் ஆண்டு நவமபர் 11 தீபாவளி வெளியீடாக அஜித்தின் அட்டகாசம், தனுஷ் நடித்த ட்ரீம்ஸ், சரத்குமார் நடித்த சத்ரபதி ஆகிய படங்களுடன் வெளியான சிம்பு நடித்த மன்மதன் 150 நாள்களுக்கு மேல் ஓடியது. சிம்புவுக்கு முதன் முதலில் சூப்பர் ஹிட் படமாக அமைந்த மன்மதன் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை