தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Siima Awards 2023 Tamil Winners List: விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்வன் 1, விக்ரம்! மொத்த வெற்றியாளர்கள் லிஸ்ட் இதோ!

Siima Awards 2023 Tamil Winners List: விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்வன் 1, விக்ரம்! மொத்த வெற்றியாளர்கள் லிஸ்ட் இதோ!

Sep 18, 2023, 12:20 PM IST

google News
சைமா 2023க்கான விருதில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை அள்ளியுள்ளது.
சைமா 2023க்கான விருதில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை அள்ளியுள்ளது.

சைமா 2023க்கான விருதில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை அள்ளியுள்ளது.

சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்படும் சைமா விருது நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதையடுத்த இந்த விருது நிகழ்ச்சியின் 11வது பதிப்பு துபாயில் நடைபெற்றது. இதில் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான சிறந்த படம், சிறந்த கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கப்பட்டன.

அதன்படி தமிழில் பொன்னியின் செல்வன் 1 படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை தேசிய விருது வென்ற ராக்கெட்ரி படத்துக்காக வாங்கியுள்ளார் மாதவன்.

தமிழில் விருதுகளை வென்ற மொத்த படங்களும், கலைஞர்களும் குறித்த முழு விவரம் இதோ

  • சிறந்த சாதனையாளர் விருது - மணிரத்னம்
  • சிறந்த படம் - பொன்னியின் செல்வன் - 1
  • சிறந்த இயக்குனர் - விக்ரம் படத்துக்காக லோகேஷ் கனகராஜ்
  • மக்கள் தேர்வு செய்த பிரபலமான நடிகர் (ஆண்) - விக்ரம் படத்துக்காக கமல்ஹாசன்
  • மக்கள் தேர்வு செய்த பிரபலமான நடிகை (பெண்) – பொன்னியின் செல்வன் 1 படத்துக்கா த்ரிஷா
  • சிறந்த நடிகர் (விமர்சகர்கர்களால் தேர்வு செய்யப்பட்டது) (ஆண்) - ராக்கெட்ரிக்காக ஆர் மாதவன்: தி நம்பி எஃபெக்ட்
  • சிறந்த நடிகை (விமர்சகர்கர்களால் தேர்வு செய்யப்பட்டது) (பெண்) - சானி காயிதம் படத்துக்காக கீர்த்தி சுரேஷ்
  • சிறந்த துணை நடிகர் (ஆண்) - கார்கி படத்துக்காக காளி வெங்கட்
  • சிறந்த துணை நடிகை (பெண்) - விக்ரம் படத்தில் ஏஜெண்ட் டினாவாக மிரட்டிய வசந்தி
  • சிறந்த நடிகர் (நெகடிவ் ரோல்) - டான் படத்துக்காக எஸ் ஜே சூர்யா
  • சிறந்த இசையமைப்பாளர் - விக்ரம் படத்துக்காக அனிருத் ரவிச்சந்தர்
  • சிறந்த பின்னணி பாடகர் (ஆண்) - விக்ரம் படத்துக்காக கமல்ஹாசன்
  • சிறந்த பின்னணிப் பாடகி (பெண்) (தமிழ்) - பீஸ்ட் படத்தின் அரபு குத்து பாடலுக்காக ஜோனிதா காந்தி
  • சிறந்த பாடலாசிரியர் - பொன்னியின் செல்வன் 1 படத்தில் பொன்னி நதி பாடலுக்காக இளங்கோ கிருஷ்ணன்
  • சிறந்த அறிமுக நடிகர் (ஆண்) - லவ் டுடே படத்துக்காக பிரதீப் ரங்கநாதன்
  • சிறந்த அறிமுக நடிகை (பெண்) - விருமன் படத்துக்காக அதிதி சங்கர்
  • சிறந்த அறிமுக தயாரிப்பாளர் - கார்கி பட தயாரிப்பாளர் கௌதம் ராமச்சந்திரன்
  • சிறந்த நடிகர் (காமெடி) - லவ் டுடே படத்துக்காக யோகி பாபு
  • சிறந்த ஒளிப்பதிவாளர் (தமிழ்) – பொன்னியின் செல்வன் 1 படத்துக்காக ரவிவர்மன்
  • சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் - பொன்னியின் செல்வன் 1 படத்துக்காக தோட்டா தரணி
  • சிறந்த அறிமுக இயக்குநர் - ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட் படத்துக்காக ஆர் மாதவன்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி