தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Siddharth: பொதுமக்கள் முன்பு 'சித்தா' சிங்கிள் டிராக்கை வெளியிட்ட நடிகர் சித்தார்த்!

Actor Siddharth: பொதுமக்கள் முன்பு 'சித்தா' சிங்கிள் டிராக்கை வெளியிட்ட நடிகர் சித்தார்த்!

Karthikeyan S HT Tamil

Sep 17, 2023, 09:23 PM IST

google News
நடிகர் சித்தார்த்தின் சொந்த தயாரிப்பில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் சித்தா திரைப்படத்தின் சிங்கிள் டிராக்கை பழனியில் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
நடிகர் சித்தார்த்தின் சொந்த தயாரிப்பில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் சித்தா திரைப்படத்தின் சிங்கிள் டிராக்கை பழனியில் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

நடிகர் சித்தார்த்தின் சொந்த தயாரிப்பில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் சித்தா திரைப்படத்தின் சிங்கிள் டிராக்கை பழனியில் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் பகுதியில் நடிகர் சித்தார்த் தனது சொந்த தயாரிப்பில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் பாசமுள்ள சித்தப்பாவாக நடித்து உள்ள 'சித்தா' என்கிற திரைப்படத்தின் சிங்கிள் டிராக் இன்று (செப்.17) வெளியிடப்பட்டது. 

'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' போன்ற படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் கதாநாயகனாக நடிகர் சித்தார்த், நாயகியாக நிமிஷா, அறிமுக பெண் குழந்தை நட்சத்திரமாக முக்கிய கதாபாத்திரத்தில் திபுவும் நடித்துள்ளனர்.

நினன் இசையமைத்துள்ள 'சித்தா' திரைப்படம் முழுக்க, முழுக்க பழனி சுற்றுவட்டார பகுதியில் படமாக்கப்பட்டது என்பதால் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியீட்டு விழாவை பழனியில் இன்று பொதுமக்கள் முன்னிலையில் நடிகர் சித்தார்த் வெளியிட்டார் .

படத்தின் சிங்கிள் டிராக்கை வெளியிட்டு நடிகர் சித்தார்த் பேசுகையில், சித்தப்பா என்பதன் சுருக்கம்தான் சித்தா. 8 வயது குழந்தைக்கும், அவளது சித்தப்பாவான எனக்குமான கதைதான் 'சித்தா'. காணாமல் போன குழந்தையை தேடும் சித்தப்பாவின் கதையை ஆக்ஷன் மற்றும் திரில்லர் நிறைந்த கதையாக சொல்லப்பட்டுள்ளது. இப்படம் செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளில் பார்க்குமாறும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்களுடன் செல்ஃபி மற்றும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நடிகர் சித்தார்த் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எல்லாம் நல்லபடியா நடக்கனும்னு பழனி முருகனை வேண்டிட்டு வந்துருக்கேன். சித்தா திரைப்படம் இந்த ஆண்டின் மிகச்சிறந்த திரைப்படமாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. உண்மை சம்பவங்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த படம், சித்தப்பா மற்றும் ஒரு பெண் குழந்தை இருவருக்கும் இடையிலான உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த படம் குழந்தை கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்." என்று அவர் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை