தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shanthanu: எந்த கேட்ட பழக்கமும் இல்ல…உதவி இயக்குநரின் மறைவால் தவிக்கும் ஷாந்தனு!

Shanthanu: எந்த கேட்ட பழக்கமும் இல்ல…உதவி இயக்குநரின் மறைவால் தவிக்கும் ஷாந்தனு!

Aarthi V HT Tamil

Jan 24, 2023, 04:51 PM IST

google News
உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன் மறைவு குறித்து நடிகர் ஷாந்தனு உருக்கமான பதிவு வெளியிட்டு உள்ளார்.
உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன் மறைவு குறித்து நடிகர் ஷாந்தனு உருக்கமான பதிவு வெளியிட்டு உள்ளார்.

உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன் மறைவு குறித்து நடிகர் ஷாந்தனு உருக்கமான பதிவு வெளியிட்டு உள்ளார்.

திரையுலகைச் சேர்ந்தவர்களில் உயிரிழப்புகள் சமீப காலமாக அதிகரித்து உள்ளது. அந்த வகையில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த ராமகிருஷ்ணா திடீரென உயிரிழந்தார். இவரின் மறைவு குறித்து நடிகர் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு வெளியிட்டு உள்ளார்.

அதில், “நேற்றிரவு ஒரு அன்பான நண்பரை இழந்துவிட்டேன். ஆர்வமுள்ள, மிகவும் திறமையான உதவி இயக்குநர். 26 வயது… எந்த கெட்ட பழக்கமும் இல்லை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை.. ஆனால் கடவுள் அவரை சீக்கிரம் அழைத்துச் சென்றுவிட்டார். அவர் வேலையின் போது இறந்துவிட்டார்.

வாழ்க்கை மிகவும் நிச்சயமற்றது. வாழ்க்கை மிகவும் அநியாயம்... தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவருக்கு ஒரு கால அவகாசம் கூட வழங்கப்படவில்லை. கீழே விழுந்து அவர் சில நிமிடங்களில் இறந்துவிட்டார். மிக மோசமான விஷயம் என்னவென்றால், அவர் இறப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு என்னை அழைத்து இருந்தார். என்னால் அவர் அழைப்பை எடுக்க முடியவில்லை. நான் அவனுடைய போனை எடுத்திருக்க வேண்டும்.

நம் வாழ்வின் அடுத்த நொடி நிச்சயமற்றது என்பதால் நாம் அனைவரும் ஈகோ வெறுப்பு அல்லது கோபம் இருந்தால் மறந்து விடுவோம். மகிழ்ச்சியாக இருக்க முயற்சிப்போம் & யார் மீதாவதது வெறுப்பை வீசுவதற்குள் பதிலாக புன்னகையைப் பரப்புவோம். மன அழுத்தத்தைத் தவிர்க்க முயற்சிப்போம் - இன்றைய உலகின் மிகப்பெரிய குற்றவாளி அது தான்.

நீங்கள் ஏதாவது ஒரு வழியாகப் போகிறீர்கள் என்றால் யாரிடமாவது பேசுங்கள், அந்த வலி மற்றும் மன அழுத்தத்தை நீங்களே தனியாகப் போக விடாதீர்கள். அது உங்களை சாப்பிட்டுவிடும்.

“என்ன சார் இருக்கு இந்த உலகத்தில், அவ்ளோ எதிர்மறை, வெறுப்பு. அதற்கு பதிலாக மகிழ்ச்சியாக இருங்கள், அன்பைப் பரப்புங்கள், அதற்கு எந்தச் செலவும் இல்லை” அதுதான் ராமகிருஷ்ணா என்னிடம் அடிக்கடி சொல்லும் ஒன்று” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

தெலுங்கு திரையுலகில் இளம் நடிகரான சுதீப் வர்மா நேற்றைய தினம் பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று இரவு தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முக திறமைகளைக் கொண்ட இ.ராமதாஸ் மாரடைப்பால் காலமானார். தொடர்ந்து திரையுலகில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை