தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Shahrukh Khan Buys Rolls Royce Cullinan Black Badge Suv Car

shahrukh khan Car: பதான் வெற்றி.. கோடி கணக்கில் செலவு செய்து கார் வாங்கிய ஷாருக்

Aarthi V HT Tamil

Mar 28, 2023, 06:17 AM IST

நடிகர் ஷாருக்கான் ரூ.10 கோடி செலவு செய்து புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார்.
நடிகர் ஷாருக்கான் ரூ.10 கோடி செலவு செய்து புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

நடிகர் ஷாருக்கான் ரூ.10 கோடி செலவு செய்து புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

நான்கு வருட இடைவெளிக்கு பிறகு நடிகர் ஷாருக்கான் நடித்த பதான் படம் வெளியானது . இப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் மழையை பொழிந்தது. ஷாருக்கின் கேரியரில் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த திரைப்படம் என்ற பெயரை பதான் எடுத்து உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

22 Years Of Varushamellam Vasantham: முறைப்பெண் மீது வரும் காதல் ஒருவனை பொறுப்பு ஆக்கும் கதை.. பாடல்கள் வேறலெவல் ஹிட்!

Vairamuthu: கவிதைகளால் துளைத்த காதல்; மூத்த பெண்ணின் மீது விழுந்த பிரியம்; சாதி மீறி கரம் சாடிய வைரமுத்து காதல்!

Veera Thirumagan: ஏவிஎம் நிறுவனத்தின் முதல் ஆக்‌ஷன் படம்.. பிரமாண்டமாக உருவான படம்.. 62 ஆம் ஆண்டில் வீரத்திருமகன்

Actor Manobala : இயக்குநர், நடிகர், காமெடியன், தயாரிப்பாளர், யூடிபர் என பன்முகத்தன்மை கொண்ட மனோபாலா நினைவுநாள் இன்று!

இந்த வெற்றியின் மூலம் ஷாருக் அந்தஸ்து உயர்ந்து இருக்கிறது. அதே மகிழ்ச்சியில் ஷாருக்கான் சுமார் ரூ.10 கோடி செலவு செய்து ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

இந்த ரோல்ஸ் ராய்ஸ் அவரது சொகுசு கார் கலெக்ஷனில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. ஷாருக்கான் தான் வாங்கிய புதிய கார் குறித்து எதுவும் கூறவில்லை என்றாலும், மும்பை சாலைகளில் 555 என்ற எண் கொண்ட இந்த கார் அவருடையதுதான் என்று இணையத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

ஷாருக்கின் வீட்டிற்கு கார் சென்றதாகவும் சிலர் சமூக வலைதளங்களில் கூறினர். உலகின் பணக்கார நடிகர்களில் ஒருவர் ஷாருக். 2023ஆம் ஆண்டுக்குள் அவரது சொத்து மதிப்பு 75 கோடி டாலர்கள் (சுமார் ரூ.6152 கோடி) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான பதான் படத்தின் வெற்றியால் கிங் கானின் ரேஞ்ச் வேற லெவலை எட்டியுள்ளது.

ஷாருக்கானிடம் ஏற்கனவே புகாட்டி, பென்ட்லி, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட பல சொகுசு கார்கள் உள்ளன. இந்த கார்கள் ஒவ்வொன்றும் பல கோடி மதிப்புடையது. சமீபகாலமாக ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்க அவர் திட்டமிட்டு இருந்தாராம்.

தற்போது பதான் படத்தின் வெற்றியை ரசித்து வரும் கிங் கான், ஜவான், டன்கி போன்ற படங்களில் நடித்து வருகிறார். சல்மான் கானின் அடுத்த படமான டைகர் 3 படத்தில் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.