'செக்ஸ்க்காக மட்டும் கல்யாணம் பண்ணிக்கல.. ஊர் வாயவும் அடைக்க முடியல' 40 வயதுக்கு மேல் 2ம் திருமணம் செய்த நடிகை..
Nov 02, 2024, 02:46 PM IST
கேரள சீரியல் நடிகையான திவ்யா ஸ்ரீதர் 40 வயதுக்கு மேல் 2ம் திருமணம் செய்த நிலையில் பலரது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.
மலையாள சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் திவ்யா ஸ்ரீதர். இவர், தன்னுடன் பத்தரைமாற்று எனும் சீரியலில் நடித்த வேணுகோபால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இது திவ்யா ஸ்ரீதருக்கு இரண்டாம் திருமணம். இதனால், பலரும் 40 வயதிற்கு பிறகும் அப்படி என்ன தேவை இருக்கிறது என கேள்வி எழுப்பி அவரை காயப்படுத்தி வந்தனர்.
வாழ்க்கையில் சில தேவைகள் இருக்கு
இந்நிலையில், தான் திருமணம் செய்துகொண்டதற்கான காரணம் குறித்து மக்கள் முன் விளக்கியுள்ளார். நான் என்னுடன் பத்திரைமாற்று சீரியலில் நடித்த வேணுகோபால் என்பவரை, படப்பிடிப்பு சமயத்தில் சந்தித்தேன். அப்போது, அவருடன் ஏற்பட்ட நட்பு எங்களுக்குள் நல்ல புரிதலைக் கொடுத்தது. இதையடுத்து இருவரும் எங்கள் வாழ்வின் தேவைகளைக் கருத்தில் கொண்டு திருமணம் செய்துகொண்டோம் எனக் கூறினார்.
எல்லோருக்கும் சொல்ல ஆசைதான்.. ஆனா
எங்கள் திருமணத்தை 4 பேருக்கு அறிவித்து செய்ய வேண்டும் என்று தான் திட்டமிட்டோம். ஆனால், இங்கு எங்களை வாழ்த்துபவர்களை விட விமர்சிப்பவர்களே அதிகமாக இருந்தனர். அதனால், நாங்கள் எங்களுக்கு வேண்டியவர்களை மட்டும் அழைத்து திருமணம் செய்தோம் எனத் தெரிவித்தார்.
வேணுகோபால் எங்களின் அடையாளம்
மேலும் பேசிய அவர், எனக்கும் என் முதல் கணவருக்கும் விவாகரத்து நடந்தது. என் 2ம் திருமணத்தில் எனது 2 பிள்ளைகளும் கலந்து கொண்டனர். என் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும், அவர்கள் தந்தை என பாதுகாப்புடன் உணர ஒருவரும் தேவை, அவர் எங்களுக்கு அடையாளமாக இருக்க வேண்டும் என நினைத்தோம். நாங்கள் எதிர்பார்ததது போல் வேணுகோபால் இருந்தார். அதில், மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை எனத் தெரியவில்லை.
அவர் ஒன்றும் தாத்தா கிடையாது
எங்கள் திருமணத்தின் போது, அவர் நீண்ட வெள்ளை தாடியுடன் இருந்ததைப் பார்த்து பலரும் 60 வயது தாத்தாவையா திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள். அப்படி என்ன தேவை இருக்கிறது என பல மோசமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
செக்ஸ் வாழ்க்கையின் ஒரு பகுதி தான்
அவர் 60 வயது தாத்தா கிடையாது. எனக்கு 40 வயது ஆகிறது. அவருக்கு 49 வயது தான் ஆகிறது. செக்ஸ் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி தான். அதற்காக மட்டும் இங்கு யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை. ஊரில் உள்ள 1000 குடங்களின் வாயை நம்மால் மூட முடியும். ஆனால், ஒரு மனிதரின் வாயை மூட யாராலும் முடியாது என விமர்சனங்களுக்கு பதிலடி தந்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன், நடிகை திவ்யா ஸ்ரீதர் அவருடன் சீரியலில் நடித்த வேணுகோபால் என்பவரை குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் நண்பர்கள் சூழ திருமணம் செய்து கொண்டார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலான நிலையில், பலரும் திவ்யா ஸ்ரீதரை மிக மோசமாக விமர்சித்த நிலையில், இவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்