Seenu Ramasamy: "அந்த 28 டேக், விஷ்ணு விஷாலுடன் நடிக்க மறுத்தது ஏன்?" மனிஷாவிடம் கேள்வி கேட்கும் சீனு ராமசாமி
Nov 25, 2023, 01:26 PM IST
என்னை மரியாதை குறைவாக நடத்திய ஒருவருடன் இணைந்து நான் ஏன் பணியாற்ற வேண்டும் எனக் கூறிய மனிஷா யாதவிடம். பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.
சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான இடம் பொருள் ஏவல் என்ற படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்க ஒப்பந்தமானவர் மனிஷா யாதவ். ஆனால் அந்த படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டார். 2014ஆம் ஆண்டிலேயே தயாராகிவட்ட இடம் பொருள் ஏவல், பைனான்ஸ் பிரச்னை காரணமாக இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
இதையடுத்து பிரபல பத்திரிகையாளர் ஒருவர், நடிகை மனிஷா யாதவுக்கு, இயக்குநர் சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டினார். இதையடுத்து நடிகை மனிஷா யாதவ் தனக்கு நன்றி தெரிவிக்கும் விடியோ ஒன்றை பதிவிட்ட சீனு ராமசாமி, மனிஷா யாதவ் தனது படத்தில் நடிப்பார் எனவும் கூறினார்.
இதற்கு தனது இன்ஸ்டாவில் பதில் அளித்த மனிஷா யாதவ், "விழா மேடையில் இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததை போல் சீனு ராமசாமிக்கும் தெரிவித்தேன். இதனால் எதுவும் மாறியதாக அர்த்தமில்லை. ஒன்பது ஆண்டுகளுக்கு முன் நான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறேன். என்னை மரியாதை குறைவாக நடத்தியவரிடம் நான் ஏன் பணியாற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து இயக்குநர் சீனுராமசாமி நடிகை மனிஷாவிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,
"சில கேள்விகள் flash back
..........................
1) இடம் பொருள் ஏவல் படப்பிடிப்பிற்கு வந்த முதல் நாள் ஏன் முதல் ஷாட்டில் 28 டேக் வாங்கினார் மணிஷா,
2) படப்பிடிப்பு தளத்தில் உதவிட வந்த மூத்த நடிகையர் வடிவுக்கரசி அவர்களிடம் கோபித்து கடுஞ்சொல் வீசினாரே ஏன்?
3) விஷ்ணு விஷால் ஜோடியாக நடியுங்கள் என நானும் அண்ணாமலை பீலிம்ஸ் கணேஷ் அவர்களும் கேட்ட பொழுது
ஏன் மறுத்தார் ?
4) என் சம்பளத்தில் ஒரு லட்சம் நஷ்ட ஈடாக பெற்றாரே ஏன்..?
5) மூன்று நாட்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தந்த ஹோட்டலில் தன் தயாருடன் தங்கிருந்த மனிஷா அவர்களை கடைசி ஒரு நாள் காலையில் படப்பிடிப்பில் சந்தித்தேன்.
6) அந்த 28 டேக் மேக்கிங் வீடியோவுக்கு காத்திருக்கிறேன். தெய்வம் அருளனும். இருப்பினும் உங்களோடு திரும்ப பணி புரிய விரும்பினேன்.
அன்பன்
சீனு ராமசாமி" என்று பதிவிட்டுள்ளார்.
சீனு ராமசாமி, மனிஷா யாதவ் இடையிலான இந்த கருத்து பரிமாற்றம் கோலிவுட் திரையுலகில் சர்ச்சையை கிளப்பி வருகிறது. அத்துடன் இருதரப்பினருக்கும் ஆதரவு, எதிர்ப்பு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
டாபிக்ஸ்