தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sai Pallavi: “இது வரைக்கு நீங்க பார்க்காத லவ் ஸ்டோரி; அய்யோ… அந்த எமோஷன் இருக்கே.. அவ்வளவு உண்மையா” - சாய் பல்லவி!

Sai Pallavi: “இது வரைக்கு நீங்க பார்க்காத லவ் ஸ்டோரி; அய்யோ… அந்த எமோஷன் இருக்கே.. அவ்வளவு உண்மையா” - சாய் பல்லவி!

Sep 28, 2024, 06:41 PM IST

google News
Sai Pallavi: ராஜ்குமார் பெரியசாமி நீங்கள் அவர்களை அப்படியே பிரதிபலிக்கத் தேவையில்லை. நீங்கள் உங்கள் பாணியில் அந்த கேரக்டரை பிரதிபலிக்கலாம் என்றார். அதைத்தான் நான் முயற்சி செய்திருக்கிறேன். படத்தில் காதலர்களுக்கு இடையிலான எமோஷனுக்கு நான் மிகவும் உண்மையாக இருந்து இருக்கிறோம். - சாய் பல்லவி! (https://honourpoint.in)
Sai Pallavi:  ராஜ்குமார் பெரியசாமி நீங்கள் அவர்களை அப்படியே பிரதிபலிக்கத் தேவையில்லை. நீங்கள் உங்கள் பாணியில் அந்த கேரக்டரை பிரதிபலிக்கலாம் என்றார். அதைத்தான் நான் முயற்சி செய்திருக்கிறேன். படத்தில் காதலர்களுக்கு இடையிலான எமோஷனுக்கு நான் மிகவும் உண்மையாக இருந்து இருக்கிறோம். - சாய் பல்லவி!

Sai Pallavi: ராஜ்குமார் பெரியசாமி நீங்கள் அவர்களை அப்படியே பிரதிபலிக்கத் தேவையில்லை. நீங்கள் உங்கள் பாணியில் அந்த கேரக்டரை பிரதிபலிக்கலாம் என்றார். அதைத்தான் நான் முயற்சி செய்திருக்கிறேன். படத்தில் காதலர்களுக்கு இடையிலான எமோஷனுக்கு நான் மிகவும் உண்மையாக இருந்து இருக்கிறோம். - சாய் பல்லவி!

அமரன் படத்தின் தான் ஏற்று நடித்த இந்து கதாபாத்திரம் பற்றி ராகா தளத்திற்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

யோசனை இருந்தது

இது குறித்து அவர் பேசும் போது, “இந்தப்படம் தொடங்கும் போதே நான் மிகவும் கவனமாக இருந்தேன். காரணம், நான் இதுவரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கதையில் நடித்ததில்லை. இந்து கதாபாத்திரம் குறித்து என்னிடம் கூறும் போது, ரியல் லைஃபில் இருக்கும் ஒருவரை அப்படியே ஜெராக்ஸ் போன்று எடுத்து நடிக்க வேண்டுமா என்ற யோசனை இருந்தது.

அப்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நீங்கள் அவர்களை அப்படியே பிரதிபலிக்கத் தேவையில்லை. நீங்கள் உங்கள் பாணியில் அந்த கேரக்டரை பிரதிபலிக்கலாம் என்றார். அதைத்தான் நான் முயற்சி செய்திருக்கிறேன். படத்தில் காதலர்களுக்கு இடையிலான எமோஷனுக்கு நான் மிகவும் உண்மையாக இருந்து இருக்கிறோம்.

சாய் பல்லவி

நான் முகுந்தனின் மனைவியான இந்துவிடம் பேசும் போது அவர் அவரின் கணவர் மீது வைத்திருந்த உண்மையான காதலை என்னால் உணரமுடிந்தது. அதை எப்படி சொல்லலாம் என்றால், நாம் நம்முடைய முதல் காதலில் இருக்கும் போது, அந்தக்காதல் நிறைவேறுமா? நிறைவேறாதா? உள்ளிட்ட கேள்விகளெல்லாம் இல்லாமல், மிகவும் தூய்மையாக இருப்போம் அல்லவா? அது போல…

இந்து இன்னும் அந்த சோனில்தான் இருக்கிறார். நான் நிறைய காதல் கதைகளை பார்த்து வந்திருப்போம். அவற்றில் பலவை நாம் பார்த்து பழகி போன கதைகளாகவே இருந்திருக்கும். ஆனால், இந்தப்படத்தில் எனக்கும், சிவாவுக்கும் இடையேயான காதல் அப்படி இருக்காது. இது மிகவும் புதுமையாக இருக்கும். மிகவும் ரியலாக இருக்கும்.” என்று பேசினார்.

அமரன்

முன்னதாக, இந்தப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆன நிலையில், நேற்றைய சாய் பல்லவியின் கதாபாத்திரம் தொடர்பான வீடியோ வெளியானது. இந்த நிலையில் மலேசியாவில் நடந்த ‘அமரன்’ புரோமோஷன் நிகழ்வில், இந்தக்கதைக்கு சிவகார்த்திகேயனை கதாநாயகனாக தேர்ந்தெடுத்தது ஏன் என்பதற்கான காரணத்தை ராஜ்குமார் பெரியசாமி பேசி இருக்கிறார்.

ஏன் சிவகார்த்திகேயன்? 

அவர் பேசும் போது, “ முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நான் யாரை வேண்டுமென்றாலும் நடிக்க வைத்திருக்கலாம். ஆனால் எனக்கு ஒரு சராசரி மனிதனின் முகம் தேவைப்பட்டது. அவர் ஒரு சராசரி மனிதனுக்கான அடையாளத்தை அவர் பிரதிபலித்ததால் அவரை அந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தேன். இன்னும் 10 வருடம் கழித்து, இன்னும் பெரிய நட்சத்திர அந்தஸ்தில் சிவா இருந்தாலும் கூட, அவருக்கு அந்த சராசரி மனிதனுக்கான அடையாளம் இருக்கும்.” என்று பேசினார்.

அமரன் படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயேன் நடித்திருக்கிறார். அவரது மனைவியான இந்து கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் புவன் அரோரா மற்றும் ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீகுமார், ஷியாம் மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். 

இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர் நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தோடு சேர்த்து, சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ், நிறுவனம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரிலும், சில காட்சிகள் சென்னை, புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

சிவகார்த்திகேயனின் சம்பளம் என்ன?:

இப்படம் ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய மேஜர் முகுந்த் வரதராஜனின், இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ் என்ற புத்தகத்தில் இருந்து, இக்கதையை எழுதி, திரைக்கதை அமைத்துள்ளார், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இப்படம் ரூ. 150 கோடி முதல் 200 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படத்துக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.20 கோடி வரை பெறுவதாக தெரியவருகிறது. மேலும், பழைய கார்த்திக் நடித்த அமரன் படக்குழுவினரிடம், அனுமதி பெற்றபின், இப்படத்தின் பெயர் பொதுவெளியில் வெளியிடப்பட்டது.

 

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி