Sai Dhanya Interview: ஆசைக்காட்டி அட்ஜஸ்ட்மென்ட் கேட்டாங்க… சாய் தன்யா
Jan 10, 2023, 06:12 AM IST
Sai Dhanya on Adjustment: நடிகை சாய் தன்யா திரையுலகில் இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசிய வீடியோ வைரலாகிறது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர், சாய் தன்யா. இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான 96 படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனையடுத்து அவர் என்னங்க சார் உங்க சத்தம் படத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பில் கடைசியாக நாட் ரீச்சபிள் திரைப்படம் வெளியானது.
இன்ஜினியரிங் படிப்பு முடித்த இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக ஐடி வேலையை வேண்டாம் என சொல்லி திரைத்துறைக்குள் நுழைந்தார்.
இவர் படம் வெளியான சமயத்தில் திரையுலகில் இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேட்டி அளித்த பழைய வீடியோ வெளியாகி உள்ளார்.
அப்போது பேசிய அவர், “சினிமாவில் நடிப்பது அவ்வளவு எளிதானது அல்ல. அதிலும் என்னை போன்று சினிமா பின்னணி இல்லாமல் வருவது மிகவும் கடினம். குடும்பத்தை கஷ்டப்பட்டு நான் பேசி சம்மதம் வாங்கினேன்.
தொடர்ந்து சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசிய அவர், "சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கிறது. எனக்கும் அது நடந்து இருக்கிறது. நம்மிடம் நேராக கேட்காமல் மேலாளர் வழியாக கேட்பார்கள். இது போன்று கேட்கும் போது நாம் வைத்திருக்கும் அனைத்து நம்பிக்கையும் போய்விடும்.
இதனால் நிறைய பேர் சினிமாவை விட்டு விலக வேண்டும் என நினைக்கின்றனர். இது போன்று நடந்தால் நான் என் அம்மாவிடம் சொல்லிவிடுவேன். நாம் நல்ல பிரபலமாக மாறிய பிறகு யாரும் நம்மிடம் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேச மாட்டார்கள்.
மேலாளர் நம்மிடம் கேட்ட நாம் வேண்டாம் என சொல்வது சரி. ஆனால் நம்மிடம் கதை சொல்லிவிட்டு நம்பிக்கை கொடுத்து நேரடியாக அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேட்பார்கள். நமக்கும் ஆசை வந்துவிடும். நாம் தான் அந்த ரோலில் நடிப்போம் என நம்புவோம். ஆனால் அது கடைசியில் இல்லை என நினைக்கும் போது தான் அது வருத்தமாக இருக்கும். அப்படி செய்யாமல் இருந்தால் அது நன்றாக இருக்கும்” என்றார்.
டாபிக்ஸ்