தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Divya Spandana: காட்டுத்தீயாய் பரவிய தகவல்.. திவ்யா உயிரோடு இருக்கிறா இல்லையா? - உறுதிபடுத்திய பத்திரிகையாளர்! - விபரம்!

Divya Spandana: காட்டுத்தீயாய் பரவிய தகவல்.. திவ்யா உயிரோடு இருக்கிறா இல்லையா? - உறுதிபடுத்திய பத்திரிகையாளர்! - விபரம்!

Sep 06, 2023, 01:54 PM IST

google News
திவ்யா ஸ்பந்தனா இறந்து விட்டார் என்று தகவல்கள் பரவிய நிலையில் தற்போது அது குறித்தான விளக்கம் வெளியாகி இருக்கிறது.
திவ்யா ஸ்பந்தனா இறந்து விட்டார் என்று தகவல்கள் பரவிய நிலையில் தற்போது அது குறித்தான விளக்கம் வெளியாகி இருக்கிறது.

திவ்யா ஸ்பந்தனா இறந்து விட்டார் என்று தகவல்கள் பரவிய நிலையில் தற்போது அது குறித்தான விளக்கம் வெளியாகி இருக்கிறது.

தமிழில் ‘குத்து’ ‘பொல்லாதவன்’ ‘வாரணம் ஆயிரம்’ ‘ சிங்கம் புலி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா. 

அரசியலிலும் களமிறங்கிய ரம்யா எம்.பி யாகவும் பதவி வகித்தார். அண்மையில் தன்னுடைய தற்கொலை எண்ணங்களை பொதுவெளியில் பகிர்ந்த ரம்யா அந்த சமயத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துணையாக நின்றதாக கூறியிருந்தார். அதே போல நேற்றைய தினம் இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்ற வேண்டும் என்ற சர்ச்சை வெடித்த நிலையில்,   ‘பெயரில் என்ன இருக்கிறது’ என்றும் ட்வீட் செய்திருந்தார். 

இந்த நிலையில் இன்று காலையில் இவர் இறந்து விட்டதாகக்கூறி சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்தத்தகவலை பார்த்த அவருடைய ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

சில தமிழ் ஊடகங்களும் அவர் இறந்து விட்டதாக கூறி செய்தி வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது அவர் இறக்க வில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. இந்தத்தகவலை பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் தன்னுடைய ட்விட்டர் தளத்தில் உறுதிபடுத்தி இருக்கிறார்.

அதில் ஜெனிவாவில் திவ்யா ஸ்பந்தனா உடன் மேற்கொண்ட சந்திப்பு அழகாக இருந்தது என்றும் பல விஷயங்கள் குறித்து பேசிய நாங்கள் எங்களுக்கு இடையே உள்ள பெங்களூர் மீதான காதல் பற்றியும் பேசினோம் என்று அதில் பதிவிட்டு இருக்கிறார். இன்னொரு பதிவில் தான் திவ்யா உடன் பேசியதாகவும், அவர் நன்றாக இருப்பதாகவும் நாளை பெங்களூர் திரும்ப இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

 

அதே போல நியூஸ் மினிட் எடிட்டர் தன்யா ராஜேந்திரனும் இப்போதுதான் நான் திவ்யா உடன் பேசினேன், அவர் ஜெனிவாவில் இருக்கிறார் என்றும் இந்த பொறுப்பற்ற செய்தியை பகிர்ந்த நபர் மற்றும் இந்த செய்தியை ஊடகத்தில் வெளியிட்ட செய்தி நிறுவனங்கள் வெட்கப்பட வேண்டும் என்றும் பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் திவ்யா உயிரோடு இருக்கிறார் என்பது உறுதியாகி விட்டது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை