தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rrr Sequel: உருவாகிறது Rrr இரண்டாம் பாகம்! ஆனால் இயக்குநர் ராஜமெளலிக்கு கிடையாது? மற்றொரு சர்ப்ரைஸ் விஷயம்

RRR Sequel: உருவாகிறது RRR இரண்டாம் பாகம்! ஆனால் இயக்குநர் ராஜமெளலிக்கு கிடையாது? மற்றொரு சர்ப்ரைஸ் விஷயம்

Jul 11, 2023, 05:38 PM IST

google News
ராம் சரண் - ஜூனியர் என்டிஆர் மீண்டும் இணைந்து நடிக்க RRR படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இதை உறுதிப்படுத்திய திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத், இந்த பாகத்தை ராஜமெளலி இயக்கபோவதில்லை என மற்றொரு அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளார்.

பீரியட் படமாக வெளியாகி வசூலில் சக்கை போடு போட்ட RRR திரைப்படம் உலக அளவில் பிரபலமானது. இந்த படத்தில் இடம்பிடித்த நாட்டு நாட்டு பாடலுக்காக சிறந்த பாடல் ஆஸ்கர் விருதும் கிடைத்தது.

இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் இளம் கதாநாயகர்களான ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, சமுத்திரகனி உள்பட பலரும் நடித்திருந்தார்கள்.

ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் வெளியான இந்தப் படம் ரூ. 1,250 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலித்தது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக படத்தின் திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜயேந்திர பிரசாத பிரபல தெலுங்கு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

RRR படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது. இந்த பாகத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிக்கிறார்கள். இரண்டாம் பாகத்தின் கதை முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை. இது தெலுங்கு மாநிலங்களில் சுதந்திரத்துக்கு முன் நிகழ்ந்த முக்கிய வரலாற்று நிகழ்வில் மற்றொரு பதிவாக அமைந்திருக்கும்.

இந்த படத்தை ராஜமெளலி இயக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு. அவர் இந்த கதையை தேர்வு செய்யாதபட்சத்தில், ராஜமெளலி மேற்பார்வையில் மற்றொரு இயக்குநர் படத்தை இயக்குவார்" என்றார்

ராஜமெளலி தற்போது மகேஷ்பாபுவை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். இதை தற்போது SSMB 29 என்ற அழைத்து வருகிறார்கள். ஹாலிவுட் திரைப்படமான இந்தியான ஜோன்ஸ் பாணியில் சாகச திரைப்படமாக இது உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்த மகாபாரத கதையை வைத்து 10 பகுதிகளை இயக்க இருக்கும் படத்தின் மீது கவனம் செலுத்துவார் என தெரிகிறது. எனவே, ராஜமெளலி அந்த படங்களில் பணியை முடிப்பதற்குள் விஜயேந்திர பிரசாத் RRR இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை உருவாக்குவார் எனவும், ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோரின் முடிவை பெறுத்தும் இந்த படத்தின் உருவாக்கம் அமைந்துள்ளது எனவும் விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி