‘எனக்கு டிசிப்ளின்தான் முக்கியம்’ விஜய் கூப்பிட்டதால்தான்.. தமிழன் காமெடிகள் இப்பவும் வேற மாறி - டெல்லி கணேஷ்
Nov 10, 2024, 10:53 AM IST
தமிழன் திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்த நடித்த அனுபவம் குறித்து மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் பேசியவற்றை இங்கே பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் காமெடியன், வில்லன், குணச்சித்திர நடிகனாக 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். தற்போது 80 வயதாகும் அவர், மருத்துவரின் ஆலோசனைப்படி, மது குடிப்பது, புகைப் பிடிப்பது போன்ற பழக்கங்களில் இருந்து வெளியேறியிருந்த நிலையில், அவர் நேற்று இரவு 1 மணிக்கு உயிரிழந்துள்ளார். அவரது உடல் மக்கள் அஞ்சலிக்காக சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி கணேஷ், அவரது சினிமா கெரியரில் ஏற்று நடித்த பல காமெடி கதாபாத்திரங்கள் பிரபலம் என்றாலும், விஜயுடன் அவர் ‘தமிழன்’ திரைப்படத்தில் இணைந்து செய்த காமெடிகள் இன்றும் மக்களால் கொண்டாப்படுகிறது. அந்த காமெடிகள் குறித்து அவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக, குமுதம் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார்.
அந்த பேட்டியில் அவர் பேசியதாவது:-
“விஜய் நடித்த ‘தமிழன்’ திரைப்படத்தில் நானும் அவரும் இணைந்து செய்த காமெடிகள் இப்போதும் பிரபலமாக இருக்கின்றன. உண்மையில் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நான் நடிப்பதாக இல்லை. அதில், வேறு ஒருவர்தான் கமிட் செய்யப்பட்டு நடித்துக்கொண்டிருந்தார். ஆனால், அவரது நடிப்பு குழுவிற்கு பிடிக்கவில்லை. அதனைதொடர்ந்துதான், தமிழன் படக்குழு என்னிடம் வந்தது. அவர்கள் என்னிடம், ஒரே ஒரு நாள் மட்டும் உங்களது கால்ஷீட் வேண்டுமென்றார்கள். உடனே ஒரு நாள் என்றால் நான் நடிக்கவில்லை என்று கூறிவிட்டேன்.
இதையடுத்து அவர்கள் விஜய் உடன் காம்பினேஷன் சீன் இருக்கிறது என்றார்கள். உடனே நான் அப்படியா.. என்று யோசித்தேன். உடனே அவர்கள் ஆமாம் சார், அதுமட்டுமல்ல.. விஜய் சார் தான் நீங்கள் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பீர்களா என்று கேட்கச் சொன்னார். உடனே நான் சரி, நான் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.
விஜய்க்கு அளவில்லா மகிழ்ச்சி
நான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றவுடன், அங்கு என்னை பார்த்த விஜய்க்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது. ஷூட்டிங்கில் நான் நடித்துக்கொண்டிருந்த போது, டைரக்டர் ஏதோ கரெக்ஷன் சொல்வதற்கு வந்தார்; உடனே விஜய் அவரை தடுத்து, அதெல்லாம் வேண்டாம் என்று கூறி அவரை ஒதுக்கி, அவரை விட்டு விடுங்கள், அவர் சரியாக நடிக்கிறார் என்று கூறினார். விஜய்க்கு பொதுவாகவே நல்ல காமெடி சென்ஸ் உண்டு. ஆனால், அதை அவர் வெளியே காண்பித்துக் கொள்ள மாட்டார் அவ்வளவுதான். அவர் செய்யாத காமெடி இல்லை. அந்த படத்தில் என்னுடைய நடிப்பு அவருக்கு மிகவும் பிடித்துப்போனது” என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்