தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rip Captain Vijayakanth: 'விஜயகாந்தின் மறைவில் ‘மனிதம்’ கற்றுபோம் ' பார்த்திபன்

RIP Captain Vijayakanth: 'விஜயகாந்தின் மறைவில் ‘மனிதம்’ கற்றுபோம் ' பார்த்திபன்

Dec 29, 2023, 10:10 AM IST

google News
RIP Captain: மறைந்த? விஜயகாந்த் அவர்களின் மறைவில் ‘மனிதம்’ கற்று கொள்வோம்.இதைமட்டுமே நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
RIP Captain: மறைந்த? விஜயகாந்த் அவர்களின் மறைவில் ‘மனிதம்’ கற்று கொள்வோம்.இதைமட்டுமே நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

RIP Captain: மறைந்த? விஜயகாந்த் அவர்களின் மறைவில் ‘மனிதம்’ கற்று கொள்வோம்.இதைமட்டுமே நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

Captain Vijayakanth Passed Away: உடல் நலக்குறைவால் நேற்று மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமாக விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் திரை உலகை சேர்ந்த பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஜயகாந்த் மறைவில் மனிதம் கற்போன் என இயக்குநர் பார்த்திபன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு,

Good morning friends என்று மகிழ்ச்சியாக ஆரம்பிக்க இயலா இன்றைய விடியல்….

பிறப்பு என்பது இரு உயிர்களால் இன்னொன்றை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்துவது.

இறப்பு என்பது அவ்வுயிர் இன்னபிற உயிர்களுக்கு உதவி,பிரிகையில் தனக்கென உருவாக்கிக் கொண்ட ஒரு உலகமே அவ்வுயிருக்காக கண்ணீரோடு வழியனுப்புவதன் மூலம் இம்மானுடம் மேன்மையுற விட்டுச் சென்ற செய்தி!

மறைந்த? விஜயகாந்த் அவர்களின் மறைவில் ‘மனிதம்’ கற்று கொள்வோம். இதைமட்டுமே நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

இந்நேரத்தில் இச்சோகத்தில் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.அது மனைவியை மீறி கணவனையே சுமக்கும் தாயாகி, நீண்ட போராட்டத்திற்கு பின் இறக்கி வைத்திருக்கும் ‘பெண் விஜயகாந்த்’

திருமதி பிரேமலதா அவர்கள்!

தீவு: நாலு பக்கம் தண்ணீர். இன்றைய தீவுத்திடல் கண்ணீரோடு-செல்கிறேன்!" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்தின் மரணம் குறித்து ஏற்கனவே பார்த்திபன் வெளிட்ட ட்விட்டர் பதிவு

"ஒரு எளிமையான, யதார்த்தமான,தைரியமான, மனிதநேயமிக்க ஒரு நண்பரின் மறைவுக்குப் பின்னால், ஒரு ஆழ்ந்த அமைதியை நானே உருவாக்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன் கொஞ்ச நேரம்….

என் தந்தை கேன்ஸரால் பாதிக்கப்பட்டு தன் கடைசி நாளில் ஆழ்வார்பேட்டை தேவகி ஆஸ்பத்திரியில் மிகவும் சிரம்ப்பட்ட போது,வாசலில் இருந்த பிள்ளையார் கோவிலில் வேண்டிக்கொண்டேன்.

மீண்டு வருவாரேயானால் சரி,அல்லது சிறிதே காலம் அதுவும் இப்படித்தான் கஷ்டப் பட்டபடி வாழ்வாரேயானால் அவரை நிம்மதியாக உன்னிடம் அழைத்துச்செல் என்று துக்கத்தின் உச்சத்தில் வேண்டிக்கொண்டேன்.அப்படி விஜயகாந்த் சாரை

சிரமப்படும் மனிதராக எனக்கு பார்க்கப் பிடித்ததில்லை. நான் யாரென உலகம் ஒப்புக்கொள்ளுமுன்,என் முதல் படத்தைத் துவக்கி வைத்தவர். நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக முதலிடத்தைப் பெற்றவர். வாழ்வு விரைந்து முடிந்து விட்டாலும்,கோடானுக்கோடி உள்ளங்களை ஆட்கொண்ட அருமை மனிதர். கோடீஸ்வரன் மறைவுக்கு தெரு வரை கூட கூட்டம் இருக்காது. கட்டுக்கடங்கா கூட்டத்தால் தீவுத்திடலுக்கு மாற்றலும்,மத்திய மாநில அரசு மரியாதையும் சும்மா வந்து விடாது. அவர் வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருந்தது. அது சினிமாவில் வந்ததோ அரசியலில் வந்ததோ அல்ல.அவர் வளர்த்த மனிதநேய மாண்பிற்கு கிடைத்த மரியாதை.

மரியாதைமிகுந்தவரின் பிரிவு தரும் துயரத்தை விட, அவரது உள்ளத்தின் உயர்வு ஒரு பாடமும் கற்றுத் தருகிறது.வேதனைத் தீர எழுதிக் கொண்டே போகலாம்…. எதுவும் ஓரிடத்தில் முடியும் அது எவ்வாறு சிறப்பாக முடிகிறது என்பதே முக்கியம்.

அவரைப்போல சிறந்த மனிதனாக வாழ்வதே அவருக்கான நெஞ்சார்ந்த அஞ்சலி!" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை