குண்டான்னு சொன்ன வார்த்தை.. முத்துக்குமரன் செய்த மோட்டிவேசன்.. தனக்கும் ரஞ்சித் சாருக்குமான பனிப்போர்.. ரவீந்தர் அதிரடி
Oct 22, 2024, 07:31 PM IST
குண்டான்னு சொன்ன வார்த்தை குறித்தும், முத்துக்குமரன் செய்த மோட்டிவேசன் பற்றியும், தனக்கும் ரஞ்சித் சாருக்குமான பனிப்போர் குறித்தும் ரவீந்தர் அதிரடியாகப் பேசியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்தர் தன்னை குண்டா என்று சொன்ன வார்த்தை பற்றியும், முத்துக்குமரன் செய்த மோட்டிவேசன் குறித்தும், தனக்கும் ரஞ்சித் சாருக்குமான பனிப்போர் குறித்தும் தயாரிப்பாளர் ரவீந்தர் அதிரடியாகப் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்தர் டெலிவிகடன் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் தொகுப்பு இது..
''பிக் பாஸ் வீட்டுக்குள் போற நாளில் தான் என் அப்பாவுக்கு சர்ஜரின்னு சொல்லியிருந்தீங்க. இப்படியொரு சூழலில் பிக்பாஸ் தான் முக்கியம் என்று தேர்ந்தெடுக்கக்காரணம் என்ன?
பதில் - போன வருஷத்துக்கு முந்தைய வருஷம், நான் தேர்வாகி வீட்டுக்குள் குவாரன்டைன் பண்ணப்போறப்போ, நான் கொஞ்சம் பின்வாங்கிட்டேன். என்னால் போக முடியாத சூழல் இருந்தது. திருப்பி போன சீசனிலும் கால் வந்தது. அதையும் கண்டுக்கல. இந்த முறை போயிடலாம் என நினைக்கும்போது, போவதற்கு இரண்டு நாட்கள் முன்பு என் தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்தது. நான் உள்ளே போவேன் என்று நினைத்த அந்த குறிப்பிட்ட நாளில் அறுவை சிகிச்சை அப்பாவுக்கு இருக்கும்ன்னு நினைச்சுப்பார்க்கல. என் அப்பாவுக்கு நான் அங்கே போகணும்னு நினைப்பு இருந்தது. இதையெல்லாம் தாண்டி, சொன்ன வார்த்தையைக் காப்பத்தணும். இந்த சூழ்நிலையில் நீ போய் ஆடு அப்படின்னு என் குடும்பம் கொடுத்த மோட்டிவேசன் தான் போகக் காரணம். பிடிச்ச விஷயத்தை நேர்மையாக செய்யும்போது அந்த எனர்ஜியே அவரை திரும்பக் கூட்டிட்டு வந்திடும்ன்னு நம்பிக்கை தான்.
ரிவியூஸ் பத்தி சொன்னால் நல்லாயிருக்கும்?
பதில் - இந்த பிக்பாஸ் விளையாட்டின் அஜெண்டா தெரியாமல் உள்ளே வந்த ஆட்கள் அதிகம். இந்த வாய்ப்பு ஏன் அப்படிங்கிறதுக்கும் அவர்களுக்கு நிலையான பதில் இல்லை. இன்ட்ரோ வீடியோ கொடுத்து உள்ளே வர்றாங்க. இந்த சீசனில் ஆட்டமும் புதுசு. எல்லா விசயத்தையும் கேட்குறாங்க ஒழிய,அதன்படி கேம் ஆடுற தன்மை குறைவாக இருக்கு. அதுதான் முக்கியக் காரணம். இவங்க எல்லோருக்கும் ஒவ்வொருத்தவங்க மேல் பயம் இருக்கு. நான் புரொடியூசர் என்றால், அங்கு புரொடியூசர் கிடையாது பங்கேற்பாளர். இதே மாதிரி ரஞ்சித் சார் நடிகர் என்றால், அவரும் அங்கு பங்கேற்பாளர் தான். அதனால் அப்ரோச் மாறுது. தம் அடிக்கிற இடத்தில் ஆணும் பொண்ணும் ஒன்ன தான் இருக்கு. அந்த இடம் குரூப்பிஸத்துக்கான இடமாக இருக்கு. சாச்சனாவுக்கு நடந்த மாதிரி எனக்கு பாடி சேமிங் நடந்திருக்கு.
குண்டா, தடியான்னு கிண்டல் பண்ணியிருக்காங்க. அதையெல்லாம் வைச்சு ஸ்கோர் பண்ணாமல், நீ ஒன்னு செய்றல்ல, நான் ஒன்னு செய்றேன் விளையாடினேன். எனக்கும் ரஞ்சித் சாருக்கும் தான் பனிப்போர் இருந்தது. இரு அணிகளாக விளையாடுறதற்குப் பதிலாக அந்தந்த அணிகளுக்கு இடையே சண்டைபோட ஆரம்பிச்சுட்டோம். அந்த வன்மம் மக்கள்கிட்ட ஆரம்பிச்சதுதான், என்னோட எவிக்சனுக்கு ஒரு காரணம்.
24 மணி நேரத்தில் எவிக்சன் நாமினேஷன் ஆனாலும், ஒரு வாரத்தில் எவிக்சன் நாமினேஷன் ஆனாலும் என் பெயர் தான் இருக்கணுமா. என் உடம்பை வைத்து நாமினேட் பண்ணியிருக்காங்க. என் உடல் சூழல் தெரியாமலா என்னைக் கூப்பிட்டுருப்பாங்க. நான் வாங்குன சம்பளத்துக்கு எப்படி விளையாட முடியுமோ அப்படி ஆடுனேன்.
நாமினேட் பண்ணும்போது ரவீந்தர் உடல்நிலை சரியில்லை அப்படினு தான் நாமினேட் பண்ணியிருக்காங்க. இதை எப்படி எடுத்துக்கிறீங்க?
பதில் - நான் ரொம்ப நெகட்டிவ் ஆக எடுத்துக்குறேன். உண்மையிலேயே உன் உடல் நிலைமேல் அக்கறை இருந்து இருந்தால், அதை மோட்டிவேசனில் காட்டுங்க. அதை முத்துக்குமரன் பண்ணியிருப்பான். அண்ணே சாப்பிடுண்ணே. உடம்பு சரியில்லைன்னா யார் பார்க்கிறது. 106 நாள் ஆடவேணாமா? அப்படின்னு. அதுதான் மோட்டிவேஷன். நீ அக்கறை எல்லாம் காட்டவேண்டாம். என் உடம்பை வைச்சு, என்னை உட்கார வைக்கணும் பார்க்காத. அக்கறை மாதிரி நீ நடிக்கிற பார். அது வேண்டவே வேண்டாம்ன்னு நினைக்கிறேன்’’ எனக் கூறியிருக்கிறார், தயாரிப்பாளர் ரவீந்தர்.
நன்றி: டெலி விகடன் யூட்யூப் சேனல்!
டாபிக்ஸ்