தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ramarajan Saamaniyan Teaser:ஆட்டத்தை தொடங்கிய ராமராஜன்!அதிரடியான சாமனியன் டீஸர்

Ramarajan Saamaniyan Teaser:ஆட்டத்தை தொடங்கிய ராமராஜன்!அதிரடியான சாமனியன் டீஸர்

Sep 19, 2022, 10:33 PM IST

google News
ராமராஜன், ராதாரவி, எம்எஸ் பாஸ்கர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் சாமானியன் திரைப்படத்தினஅ டீஸர் வெளியாகியுள்ளது.
ராமராஜன், ராதாரவி, எம்எஸ் பாஸ்கர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் சாமானியன் திரைப்படத்தினஅ டீஸர் வெளியாகியுள்ளது.

ராமராஜன், ராதாரவி, எம்எஸ் பாஸ்கர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் சாமானியன் திரைப்படத்தினஅ டீஸர் வெளியாகியுள்ளது.

பத்து ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ராமராஜன் நடிப்பில் உருவாகி வரும் படம் சாமனியன். ராமராஜனின் 45வது படமான இதில் அவருடன் இணைந்து ராதா ரவி, எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

ஆர். ராகேஷ் என்பவர் படத்துக்கு திரைக்கதை எழுதி இயக்குகிறார். படம் குறித்து ராகேஷ் கூறியதாவது: இந்த கதைக்கு ராமராஜன் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை நாயகனாக நடிக்க வைத்திருக்கிறோம். அவருடன் ராதா ரவி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் சமூகத்துக்காக செய்யும் ஒரு முக்கியமான விஷயம்தான் படத்தின் கதை. ஒவ்வொரு சாமானியனுக்கும் தேவையான கதையாக அமைந்திருக்கும். படத்தில் ராமராஜனுக்கு ஜோடி கிடையாது.

பான் இந்தியா படமாக உருவாகும் சாமானியன் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இதையடுத்து இந்தப் படத்தின் டீஸரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

படத்தில் பிரதான கதாபாத்திரங்களாக கூறப்பட்டுள்ள மூவரு துப்பாக்கியுடன் நூலகம் ஒன்றுக்குள் அதிரடியாக என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டும் விதமாக படத்தின் டீஸர் அமைந்துள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டில் பெங்கல் வெளியீடாக ரிலீசான மேதை என்ற படத்தில் நடித்திருந்தார் ராமராஜன். இதன் பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவர், எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் பெரிதாக தலை காட்டாமல் இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து தற்போது பத்து ஆண்டுகள் கழித்து அதிரடியான ஆக்‌ஷனுடன் கூடிய பான் இந்தியா படம் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கிறார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி