தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  திரெளபதி முர்மு குறித்து சர்ச்சை கருத்து.. ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு

திரெளபதி முர்மு குறித்து சர்ச்சை கருத்து.. ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு

Karthikeyan S HT Tamil

Jun 28, 2022, 12:19 PM IST

google News
“திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?” என டுவிட்டரில் பதிவிட்ட இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
“திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?” என டுவிட்டரில் பதிவிட்ட இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

“திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?” என டுவிட்டரில் பதிவிட்ட இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமிதாப்பச்சன், நாகர்ஜூனா போன்ற பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் ஆழமாக முத்திரை பதித்தவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. தெலுங்கிலும் இந்தியிலும் கொடி கட்டி பறந்த ராம் கோபால் வர்மா சர்ச்சைக்குரிய திரைப்படங்களை இயக்கியும் நாடு முழுவதும் மிகவும் பிரபலமானவர்.

திரைப்படங்கள் மட்டுமின்றி சமூகவலைத்தளங்களில் அவர் வெளியிடும் கருத்துக்கள் அவ்வப்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. சமீபத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராம் கோபால் வர்மா கருத்து தெரிவித்திருந்தார்.

அதில், "திரெளபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்? குறிப்பாக கௌரவர்கள் யார்?." என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. தெலங்கானா பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான நாராயண ரெட்டி இயக்குநர் ராம்கோபால் வர்மாமீது ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், ராம் கோபால் வர்மா தன்னுடைய முந்தைய பதிவை மேற்கொள்காட்டி "மகாபாரதத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் திரெளபதி. அந்த பெயர் மிகவும் அரிதானது என்பதால் அதனோடு தொடர்புடைய கதாபாத்திரங்களை நினைவுபடுத்திப் பார்த்தேன். யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அதனை பதிவிடவில்லை" என்று விளக்கம் அளித்திருந்தார்.

இந்தநிலையில், லக்னௌவின் ஹஸ்ரத்கஞ்ச் கோல்வாலியில் சமூக சேவகர் மனோஜ் சின்ஹா என்பவர் ராம் கோபாலுக்கு எதிராக புகாரளித்துள்ளார். இதன் அடிப்படையில் ஐடி சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை