தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rip Captain Vijayakanth: வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி.. விஜயகாந்த் வாழ்க.. கண்ணீர் விட்ட ரஜினி

RIP Captain Vijayakanth: வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி.. விஜயகாந்த் வாழ்க.. கண்ணீர் விட்ட ரஜினி

Aarthi V HT Tamil

Dec 29, 2023, 10:49 AM IST

google News
மறைந்த விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார்.
மறைந்த விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார்.

மறைந்த விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார்.

தீவுத்திடலில் வைக்கப்பட்டு இருக்கும் மறைந்த விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறுகையில் , “ நான் கன்னியாகுமரியில் படப்பிடிப்பிலிருந்தேன். நேற்று வருவதாகத் தான் இருந்தது. இது ரொம்ப கஷ்டமாக இருந்தது. விஜயகாந்த் பற்றி பேச வேண்டும் என்றால் நிறைய இருக்கு. நட்புக்கு இலக்கணம் அவர். ஒரு முறை பழகினால் யாரும் அவரை மறக்க மாட்டார்கள்.

அவர், நண்பர்கள், அரசியல்வாதிகள், ஊடகம் மேல் கோபம் கொள்வார். ஆனால் அவர் மேல் யாருக்கும் கோபம் வராது. விஜயகாந்த் கோபம் பின்னால் ஒரு நியாயம் இருக்கும்.

ஒரு முறை விஜயகாந்துடன் பழகினால் அவரின் அன்புக்கு அனைவரும் அடிமையாகிவிடுவார்கள். விஜயகாந்த் தைரியத்துக்கும், வீரத்துக்கும் இலக்கணமானவர். கேப்டன் என்பது விஜயகாந்துக்கு பொருத்தமான பெயர்.

எனக்கு ஒரு முறை உடல்நிலை சரியில்லாமல் ராமச்சந்திரா மருத்துவமனையில் சுயநினைவு இல்லாமல் இருக்கும் போது, நிறைய பேர் வந்து தொந்தரவு செய்தார்கள். அங்கு வந்த விஜயகாந்த், 5 நிமிடத்தில் என்ன செய்தார் என தெரியவில்லை தொந்தரவு செய்தவர்களை அனுப்பினார்.

என் ரூம் பக்கமே, ரூம் போட சொல்லி யார் தொந்தரவு செய்தாலும் பார்த்து கொள்கிறேன் என சொன்னார். அதை மறக்க முடியாது. சீங்கபூர், மலேசியாவிற்கு நடிகர் சங்கம் சார்பாக சென்றோம். மலேசியாவில் அனைவரும் பேருந்தில் ஏறிவிட்டார்கள். ரசிகர்கள் எல்லாரும் வந்துவிட்டார்கள். என்ன செய்வது என தெரியவில்லை. அவர் அதை பார்த்து உடனே வந்தார். 2 நிமிடத்தில் எல்லாரையும் அடித்து விரட்டி என்னை பூ மாதிரி அழைத்து வந்தார். அந்த மாதிரியான நபரை இப்படி பார்க்க கஷ்டமாக இருக்கிறது. 71 வயதில் 6,4 அடித்து மறைந்துவிட்டார். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்கள் மனதில் யார்? விஜயகாந்த் வாழ்க” என்றார்.

முன்னதாக விமான நிலையத்தில் பேசிய ரஜினிகாந்த், “ அன்பு நண்பர் விஜயகாந்த் இழப்பு மிகப் பெரிய துரதிருஷ்டம். அவர் அசாத்தியமான மன உறுதி உள்ள மனிதர். எப்படியும் உடல்நிலை தேறி வருவார் என எல்லாரும் நினைத்தோம்.

ஆனால் சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் அவரை பார்க்கும் போது எனக்கு நம்பிக்கை குறைவாகிவிட்டது. அவர் இன்னும் ஆரோக்கியமாக இருந்து இருந்தால் தமிழ் அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்து இருப்பார். தமிழ் மக்களுக்கு நிறைய நல்லது செய்து இருப்பார். அந்த பாக்கியத்தை தமிழ் மக்கள் இழந்து இருப்போம் “ என்றார்.

நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதால் உடனே படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சென்னைக்கு புறப்பட்டு வந்தார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை