தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விக்ரம் வேதா படம் பார்த்து அழுத ராதிகா ஆப்தே

விக்ரம் வேதா படம் பார்த்து அழுத ராதிகா ஆப்தே

Aarthi V HT Tamil

Jun 16, 2022, 06:05 PM IST

google News
நடிகை ராதிகா ஆப்தே விக்ரம் வேதா படம் பார்த்து அழுததாக கூறினார்.
நடிகை ராதிகா ஆப்தே விக்ரம் வேதா படம் பார்த்து அழுததாக கூறினார்.

நடிகை ராதிகா ஆப்தே விக்ரம் வேதா படம் பார்த்து அழுததாக கூறினார்.

விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டு அழுதேன் என்று ராதிகா ஆப்தே கூறியுள்ளார் .

இதில் நடித்தது குறித்து ராதிகா ஆப்தே பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், "நான் படத்தைப் பார்த்தபோது, ​​​​அதன் பின்னால் உள்ள யோசனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த நேரத்தில், நான் அதே மாதிரியான ஒன்றை எழுதிக்கொண்டிருந்தேன்.

இயக்குநர்களை சந்தித்ததும் அவர்களின் ரசிகையாக மாறிவிட்டேன். அவர்கள் தனித்துவமானவர்கள். அவர்களை போல் நான் யாரையும் சந்திக்கவில்லை. அவர்களுக்கு என ஒரே ஒரு பேஸ்ஃபுக் கணக்கு தான் இருக்கிறது. 

அவர்கள் அனைத்தையும் ஒன்றாக இணைந்து தான்  செய்வார்கள்.  நான் அவர்களுடன் இரண்டு மணி நேரம் பேசியது மிகவும் அழகாக இருந்தது.  எனவே, அவர்களுடன் பணியாற்றினால் அதிக நேரம் கிடைக்கும் என நான் நினைத்தேன். மேலும், நான் சைஃப் உடன் வேறு இரண்டு இடங்களில் பணியாற்றினேன்.

அதை நான் ரசித்தேன். இது ஒரு பெரிய படம். எனது கேரியரில் ஒரு பெரிய கமர்ஷியல் படம் தேவை என நினைத்தேன். அதை இந்த படம் செய்துவிட்டது. இது என்னுடைய உணர்வுக்கு ஏற்ற பெரிய படம்.  படப்பிடிப்பு முடித்த பிறகு நான் அழுதேன். படத்தை நான் மிகவும் ரசித்தேன். வெறும் 12 நாள் படப்பிடிப்பு என்றாலும் அழுதேன்” என்றார். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி