அருணாச்சலம் லாப பங்க கணக்கு.. நன்றி மறந்த ரஜினி.. “ இவரு வெறும் ரீலு.. சுண்டு விரல கூட கொடுத்து உதவல’ - பாலாஜி!
Nov 04, 2024, 06:58 AM IST
ஆரம்ப காலத்தில் உதவிய தயாரிப்பாளர்களுக்கு தன்னுடைய சுண்டு விரல கூட இந்த ரீல் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் கொடுத்து உதவவில்லை - பாலாஜி!
ரஜினிகாந்த் தமிழ்நாட்டிற்கு செய்த தொண்டு என்ன என்று பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான பாஸ்கரின் மகன் பாலாஜி பிரபு கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இது குறித்து மீடியா சர்க்கிள் யூடியூப் சேனலுக்கு பேசிய அவர், “ ரஜினிகாந்த் அருணாச்சலம் திரைப்படத்தின்போது, ஒரு தீர்க்கமான முடிவு எடுத்தார். அது தனக்கு ஆரம்ப காலத்தில் உதவி செய்த தயாரிப்பாளர்களுக்கு அந்தப்படத்திலிருந்து கிடைக்கும் லாபத்தில், ஒரு பங்கை கொடுக்க வேண்டும் என்பது.
லாப பங்கு கணக்கில்
அதன்படி, ரஜினிகாந்த் நடித்த பைரவி திரைப்படத்தை என்னுடைய அப்பா பாஸ்கர் இயக்கி இருந்ததால், அவரையும் அருணாச்சலம் லாப பங்கு கணக்கில் சேர்த்திருந்தார். இது தொடர்பாக பேச ரஜினியிடம் இருந்து என்னுடைய அப்பாவிற்கு அழைப்பு வந்தது. நானும், அப்பாவும் அவரை பார்க்கச் சென்று இருந்தோம். அவர் விஷயத்தை சொன்னார்.
உடனே என் அப்பா, எந்த பங்கும் இல்லாமல், லாபத்தில் நான் பங்கெடுத்துக் கொள்வது எனக்கு சரியாக படவில்லை. ஒன்று படத்திற்கு நான் கதை, திரைக்கதை வசனம் எழுதிக் கொடுக்கிறேன்; இல்லை என்றால், ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடாக தருகிறேன். அப்படியும் இல்லையா?.. உங்களுடைய கால்ஷீட்டை தாருங்கள் படம் எடுக்கிறேன். இப்படி ஏதாவது ஒன்றில் என்னுடைய பங்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல, அதை மறுத்த ரஜினிகாந்த் அப்படியான நெறிமுறை இந்த விஷயத்தில் இல்லை என்று கூறிவிட்டார்..
இதையடுத்து அப்பா, அப்படி என்றால் இந்த விஷயத்தில் என்னை விட்டு விடுங்கள் என்று சொல்லி வந்து விட்டார். இதை ஸ்ரீதர் சாரிடமும் ரஜினிகாந்த் செய்ய முயன்றார். ஆனால் ஸ்ரீதர் சாரும் அந்த இலவசம் தனக்கு தேவையில்லை என்று சொல்லி மறுத்து விட்டதாக கூறப்பட்டது. அதற்கு காரணமும் இருக்கிறது.
விஜயகுமாருக்கு திடீரென்று
80 களின் இறுதியில், ரஜினிகாந்த் நடிகர் விஜயகுமாருக்கு திடீரென்று கை கொடுக்கும் கை என்ற திரைப்படத்தில் கால்ஷீட் ஆனால் என்னுடைய அப்பா போன்று ஆரம்ப காலத்தில் இருந்து அவருக்கு உதவியவர்களுக்கு, அவர் அவரது சுண்டு விரலை கூட கொடுக்கவில்லை. தீர்ப்புகள் திருத்தப்படலாம் என்ற படத்தில் ரஜினிகாந்தை அப்பா நடிக்க கேட்ட பொழுது, ரஜினிகாந்த் தான் பெரிய பேனர்களில் மட்டும்தான் படம் நடிப்பேன் என்று கூறிவிட்டார். அப்படி நீங்கள் பெரிய பேனரில் தான் இருப்பீர்கள் என்றால், ஏன் முதலில் சின்ன பேனர்களில் நடிக்கிறீர்கள்.
படையப்பா படத்தில் ஒரு வசனம் வரும் ‘ஒரு துளி வேர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது இந்த தமிழ் அல்லவா என்று.. அப்படிப்பட்ட இந்த தமிழ்நாட்டிற்கு ரஜினிகாந்த் என்ன செய்து இருக்கிறார்? ஏதாவது இலவசமாக பள்ளி நடத்துகிறாரா? இல்லை முதியோர்களுக்கு இல்லம் அமைத்து கொடுத்திருக்கிறாரா? இல்லை அனாதை ஆசிரமம் நடத்துகிறாரா? இந்த தமிழ்நாட்டிற்காக அவர் செய்த தொண்டு என்ன? அதற்கான பதில் வெறும் முட்டை தான்;
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பல பள்ளி குழந்தைகளை படிக்க வைத்தார். அவர் இறந்த பின்னரும் அந்த சேவையானது அவரது குடும்பத்தின் வாயிலாக செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. விஜயகாந்த் அவ்வளவு உதவிகளை செய்து இருக்கிறார்; இவ்வளவு ஏன், நடிகர் சூர்யா வருடம், வருடம் தன்னுடைய அகரம் அறக்கட்டளை மூலம் பள்ளி குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.இவர்கள் எல்லோரும் தான் ரியல் சூப்பர் ஸ்டார்கள்; மற்றவர்கள் எல்லோரும் ரீல் சூப்பர் ஸ்டார்கள்தான்; இந்த லட்சணத்தில் இதில் யார் சூப்பர் ஸ்டார் என்ற போட்டி வேறு இவர்களுக்கு.…” என்று பேசினார்.
டாபிக்ஸ்