Priya Raman: பிரியா ராமன், ரஞ்சித் இடையே எதனால் பிரிவு? - மீண்டும் இணைந்தது எப்படி
Sep 16, 2023, 06:00 AM IST
பிரியா ராமன், ரஞ்சித் பிரிந்து மீண்டும் சேர்த்து வாழ ஆரம்பித்தனர்.
தமிழ் சினிமாவில், 1999 ஆம் ஆண்டு நேசம் புதுசு படத்தில் இணைந்து நடித்தபோது ரஞ்சித்தும், பிரியா ராமனும் காதலித்தனர். இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதியருக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர்.
வருடங்கள் செல்லச் செல்ல இருவருக்கும் இடையே பிரச்னைகள் எழுந்தன. 2014 ஆம் ஆண்டு பிரியா ராமனும், ரஞ்சித்தும் ரீதியாக பிரிந்தனர். குழந்தைகளின் பொறுப்பை பிரியா ராமன் ஏற்றார்.
மறுபுறம் ரஞ்சித் மற்றொரு திருமண உறவில் நுழைந்தார். விவாகரத்து பெற்ற அதே ஆண்டில் நடிகை ராகசுதாவை, ரஞ்சித் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் ஒரு வருடத்தில் அந்த உறவு முடிவுக்கு வந்தது. பின்னர் ரஞ்சித்தும், பிரியா ராமனும் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். ஏழு வருட விவாகரத்துக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்தனர். அப்போது, இந்த விஷயம் பெரிய அளவில் செய்தி முக்கியத்துவம் பெற்றது.
ஒரு பக்கம் இருவரும் மீண்டும் இணையும் முடிவை அனைவரும் பாராட்டினர். பிரியா ராமன் மற்றும் ரஞ்சித் விவாகரத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது சில வதந்திகள் வெளியாகி வருகின்றன.
ரஞ்சித்துக்கும், ராகசுதாவுக்கும் இடையே உள்ள தொடர்பு பிரியா ராமனுக்குத் தெரிய வந்ததில் இருந்து பிரச்னைகள் தொடங்கி விவாகரத்தில் விளைந்ததாகக் கூறப்படுகிறது.
பிரிந்ததற்கான காரணம் என்ன என்பதை இருவரும் வெளிப்படையாக கூறவில்லை.
வள்ளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா ராமன். படங்களில் நடித்தாலும் அவருக்கு பெயரை வாங்கி கொடுத்தது செம்பருத்தி சீரியல்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்