தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வேட்டையை ஆரம்பித்த வேட்டையன்! முன்பதிவே இவ்வளவா? முதல் நாள் வசூலே அள்ளப்போறது கன்பர்ம்!

வேட்டையை ஆரம்பித்த வேட்டையன்! முன்பதிவே இவ்வளவா? முதல் நாள் வசூலே அள்ளப்போறது கன்பர்ம்!

Suguna Devi P HT Tamil

Oct 08, 2024, 11:07 AM IST

google News
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் அக்டோபர் 10 அன்று வேட்டையன் திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் அக்டோபர் 10 அன்று வேட்டையன் திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் அக்டோபர் 10 அன்று வேட்டையன் திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் அக்டோபர் 10 அன்று வேட்டையன் திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினி நடித்து வருகிறார். ஜெய்பீம் பட இயக்குநர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள வேட்டையன் படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்து கதை குறித்தும், படம் பேசப்போக்கும் விசயங்கள் குறித்தும் சமூக வலைத் தளங்களில் அனல் பறக்க விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது. 

வேட்டையில் இறங்கிய வேட்டையன் 

வேட்டையன் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு கடந்த இரு தினங்களுக்கு முன் தொடங்கியது. இதனையடுத்து சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல நகரங்களில் முதல் நாளிற்கான பெரும்பான்மையான டிக்கெட் புக் ஆகியுள்ளது. மேலும் பல ஊர்ப்பகுதிகளிலும் டிக்கெட்கள் விற்பனை ஆக தொடங்கியுள்ளன. 

மேலும் இப்படத்திற்கான சிறப்பு காட்சிகளுக்கு தற்போது வரை அனுமதி கிடைக்க வில்லை. தமிழ்நாட்டில் முதல் காட்சி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள வேட்டையன் படத்தின் முதல் நாள் வசூல் அதிகமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதல் நாள் அனைத்து காட்சிகளும் ஹவுஸ் ஃபுல் ஆகி விடும் எனவும் கூறப்படுகிறது.

நடிகர் ரஜினியின் சம்பளம் 

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் ஒட்டுமொத்தமாக 200 கோடி ரூபாய் செலவில் உருவாகி உள்ளது. மேலும் இப்படத்திற்காக ரஜினி 125 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஜினிக்கு அடுத்ததாக அமிதாப் பச்சனுக்கு 7 கோடி வழங்கப்பட்டுள்ளது. பின் ராணா டகுபதி, பகத் பாசில் இருவருக்கும் 2 கோடியும், மஞ்சு வாரியருக்கு 1.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.  

அடுத்தடுத்த அப்டேட் கொடுக்கும் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன் உடல்நிலைக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின் சிகிச்சைக்கு பின் நலம் பெற்று வீடு திரும்பினார். இவரது உடல் நலக் குறைவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கூலி படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த மாதம் வேட்டையன் படம் வெளியாக உள்ளது. மேலும் தற்போது வெளியாகி உள்ள மணிரத்னம் உடன் இணையும் செய்தி என ரஜினி அடுத்தடுத்து அப்டேட்களை கொடுத்து வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் கூலி படத்திற்கு பின் ரஜினிகாந்த் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் அடுத்த படம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தளபதி படத்திற்கு பின் இவர்கள் இருவரும் கூட்டணி இதுதான். மேலும் இப்படத்திற்கான அறிவிப்பு ராஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை