Vijay Yesudas: நகை திருட்டு விவகாரம்.. விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடு போனதா?
Jun 12, 2023, 01:15 PM IST
விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருட போன விவகாரத்தில் காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்து உள்ளது.
பாடகர் மற்றும் நடிகராக சினிமாவில் பயணித்து வருபவர், விஜய் யேசுதாஸ். இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி தக்ஷனா மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்கள் கடந்த மார்ச் மாதம் அபிராமபுரம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்திருந்தார். தங்களது வீட்டில் வைக்கப்பட்டிருந்து தங்க மற்றும் வைர நகைகள் திருடப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளித்தார்.
அதில், "நாங்கள் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு கடைசியாக நகையை பார்த்தோம். ஆனால் தற்போது காணவில்லை. நகை திருட்டு தொடர்பாக தங்களது வீட்டில் பணிபுரிந்த மேனகா, பெருமாள் ஆகியோர் மீது தனது மனைவி தர்ஷனா சந்தேகம் தெரிவித்திருப்பதாக” புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
திருடு போன நகைகளின் மதிப்பு மொத்தம் 60 சவரன் வரை இருக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வீட்டில் பணியாற்றிய 11 ஊழியர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தியதில் யாரும் திருடவில்லை என தெரியவந்தது. பாடகர் விஜய் யேசுதாஸ் வெளிநாட்டில் இருப்பதால் பலமுறை அவரை தொடர்பு கொண்டு கேட்ட போதும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லையாம்.
மேலும் புகார் அளித்த விஜய் யேசுதாஸின் மனைவி தக்ஷனாவும் காவல் நிலையத்தில் விசாரணைக்கு சரியான முறையில் விளக்கம் அளிக்கவில்லை. திருடு போனதாக சொல்லப்பட்ட 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் மிக பாதுகாப்பான நம்பர் பதிவிடும் லாக்கரில் வைக்கப்பட்டு இருந்தும், அவை உடைக்கப்படவில்லை
அந்த லாக்கரின் கடவுச்சொல் விஜய் ஏசுதாஸ் மற்றும் அவரது மனைவி தக்ஷனா ஆகிய இருவருக்கு மட்டுமே தெரியும் நிலையில் அது எப்படி காணமால் போகும் என சந்தேகம் எழுந்து உள்ளது. இதனால் விஜய் ஏசுதாஸின் குடும்பத்தினர் நாடகம் ஆடுவதாக சந்தேகம் எழுந்து இருக்கிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்