தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pm Modi : ஆஸ்கர் வென்ற நாட்டு நாட்டு பாடல் - பிரதமர் மோடி வாழ்த்து!

PM Modi : ஆஸ்கர் வென்ற நாட்டு நாட்டு பாடல் - பிரதமர் மோடி வாழ்த்து!

Divya Sekar HT Tamil

Mar 13, 2023, 10:44 AM IST

Naatu Naatu : ஆஸ்கர் விருது வென்ற ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Naatu Naatu : ஆஸ்கர் விருது வென்ற ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Naatu Naatu : ஆஸ்கர் விருது வென்ற ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

95 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியாவில் இருந்து 3 பிரிவுகளில் படங்கள் போட்டியிட்டது. அதன்படி சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் போட்டியிட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

27 years Of Love Today: இளைஞருக்கு வரும் விடாப்பிடியான ஒரு தலைக்காதல்.. இறுதியில் என்ன ஆகிறது என்பதே லவ் டுடே!

HBD Sai Pallavi : மலர்.. சிம்பிள் என்றாலே இவர் தான்.. இளைஞர்களின் கனவு கன்னி.. நடிகை சாய் பல்லவி பிறந்த நாள் இன்று!

நான் தான் வில்லன்.. நான் தான் ஹீரோ.. இரட்டை வேடங்களில் எம்ஜிஆர்.. அனல் பறந்த நினைத்ததை முடிப்பவன்

HBD T. Rajendhar: தமிழ் சினிமாவின் ஆல்ரவுண்டராக ஜொலித்தவர்! டிரெண்ட் செட்டராக இருந்த டி.ராஜேந்தர்

இந்நிலையில் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த சிறந்த பாடலுக்கான பிரிவில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்து உள்ளது. இதற்கான விருதை பாடலாசிரியர் சந்திரபோஸூம், இசையமைப்பாளர் கீரவாணியும் பெற்றுக் கொண்டனர்.

முன்னணி இயக்குநர் ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்று வரலாறு சாதனை படைத்துள்ளது . தெலுங்குப் படம் ஒன்று ஆஸ்கர் விருதை வென்றது இதுவே முதல் முறை.இந்த விழாவில் என்டிஆர், ராஜமௌலி மற்றும் ராம் சரண் ஆகியோர் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் ஷெர்வானி அணிந்து கலந்து கொண்டனர்.

இந்நிலையில்,ஆஸ்கர் வென்ற நாட்டு.. நாட்டு.. பாடலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த விருதால் ஒட்டுமொத்த இந்தியாவும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறது என தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்ட பதிவில், எதிர்பார்த்தது தான்.‘நாட்டு நாட்டு’ பாடலின் புகழ் உலகளாவியது. இன்னும் பல வருடங்கள் நினைவில் நிற்கும் பாடலாக இது இருக்கும். வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”என பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.