தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  செஞ்ச தப்புக்கு பொறுப்பு ஏத்துக்கனும்.. வீட்ல எல்லோருக்கும் கஷ்டம்.. டைவர்ஸ் குறித்து முதல்முதலாக பேசிய விஜய் யேசுதாஸ்..

செஞ்ச தப்புக்கு பொறுப்பு ஏத்துக்கனும்.. வீட்ல எல்லோருக்கும் கஷ்டம்.. டைவர்ஸ் குறித்து முதல்முதலாக பேசிய விஜய் யேசுதாஸ்..

Oct 18, 2024, 02:12 PM IST

google News
பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸ் தனது விவாகரத்து குறித்து முதல் முறையாக பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸ் தனது விவாகரத்து குறித்து முதல் முறையாக பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸ் தனது விவாகரத்து குறித்து முதல் முறையாக பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்தியத் திரையுலகில் மிகவும் பிரபலமான பாடகர்களில் ஒருவர் யேசுதாஸ். இவரின் மகனான விஜய் யேசுதாஸ் தந்தையைப் போல பாடகராக எண்ணி முறையாக சங்கீதம் பயின்று பாடகரானார். இவர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.

விவாகரத்து குறித்து பேசிய விஜய் யேசுதாஸ்

இந்த நிலையில் தான் இவர் தனது மனைவி தர்ஷனாவை விவாகரத்து செய்தது குறித்து தற்போது ஐ அம் வித் தான்யா வர்மா எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் விஜய் யேசுதாஸ். அந்தப் பேட்டியில் நானு் மனைவி தர்ஷனாவும் பரஸ்பர புரிதல் ஏற்பட்ட பின்னரே விவாகரத்து பெற்றோம்.

என் வாழ்க்கையிலே நான் எடுத்த மிகவும் வேதனையான முடிவு இதுதான். எங்கள் வாழ்க்கை குறித்து எனக்கும் தர்ஷனாவிற்கும் நல்ல புரிதல் இருந்தாலும், எங்கள் விவாகரத்து முடிவை தற்போதுவரை பெற்றோர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என வருத்தமாக கூறினார்.

எத்தனை நாள் மறைக்க முடியும்?

மேலும் பேசிய அவர், நான் சினிமா தொடர்புடைய நபராக இருப்பதால், என்னுடைய வாழ்க்கை குறித்து மற்றவர்கள் கூறும் கருத்துகளை யோசித்துக் கொண்டே இருக்க முடியாது. அதுமட்டுமின்றி, சில விஷயங்களை எத்தனை நாட்கள் மறைத்து வைக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பினார்.

எங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை என் மகளால் ஒரளவுக்கு புரிந்துகொள்ள முடிகிறது. ஏனென்றால் அவளுக்கு 15 வயது ஆகிறது. ஆனால், என் மகனுக்கு 9 வயதுதான் ஆவதால் இதுகுறித்து அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் எங்கள் இருவரின் மனநிலையை புரிந்துகொள்ள சிறிது காலம் ஆகலாம் என நினைக்கிறேன் என்றார்.

எல்லாம் பயனற்றது

அத்துடன் ஒருவர் தான் செய்த தவறுகளுக்கும் செயலுக்கும் பொறுப்பு ஏற்க வேண்டும். இல்லையென்றால் இத்தனை நாள் செய்த அனைத்தும் பயனற்றதாக மாறிவிடும் என பேசியுள்ளார். இவரின் இந்தக் கருத்து பலரையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

விஜய் யேசுதாஸிற்கும் அவரது மனைவிக்கும் இடையே மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஈகோ விவகாரத்தால் தான் இப்படி பிரிந்திருப்பார்கள் என தற்போது பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சினிமாவில் அறிமுகம்

தந்தையைப் போல சினிமா உலகில் சாதிக்க வேண்டும் என எண்ணிய இவர், கடந்த 2000ம் ஆண்டு வித்யாசாகரால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். பின், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இவர், பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

தந்தை யேசுதாஸின் குரல் போன்றே இவரது குரலும் இருப்பதால், இவர் குரலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவர் சினிமாவில் ஒரு பாடகராக மட்டும் நிற்காமல், நடிப்பிலும் ஆர்வம் காட்டத் தொடங்கினார். தமிழ் மொழியில் முதலில் நடிகர் தனுஷூடன் மாரி படத்தில் நடித்தார். இதில் மிடுக்கான போலிஸ் அதிகாரியாக நடித்து அசத்தியிருப்பார். இதையடுத்து அவர் படைவீரன் எனும் படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

முன்னதாக இவர் மனைவி தர்ஷனாவை பிரிந்ததற்கு நடிகர் தனுஷே காரணம் என பலரும் குற்றம்சாட்டி வந்தனர். தமிழ் சினிமாவில் பல நட்சத்திர ஜோடிகள் விவாகரத்து பெற்ற நிலையில், இந்தப் பேச்சு அடிபட்டது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி