தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விஜய் சேதுபதியின் கவுரவம் கூடுகிறது! பார்த்திபன் நெகிழ்ச்சி பதிவு!

விஜய் சேதுபதியின் கவுரவம் கூடுகிறது! பார்த்திபன் நெகிழ்ச்சி பதிவு!

Suguna Devi P HT Tamil

Oct 08, 2024, 03:30 PM IST

google News
விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 8 இன் தொடக்க விழாவில் புதிதாக தொகுப்பாளராக வந்துள்ள நடிகர் விஜய் சேதுபதி பார்த்திபன் எழுதிய கவிதை ஒன்றினை நினைவு கூர்ந்து எடுத்துக் காட்டி பேசினார்.
விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 8 இன் தொடக்க விழாவில் புதிதாக தொகுப்பாளராக வந்துள்ள நடிகர் விஜய் சேதுபதி பார்த்திபன் எழுதிய கவிதை ஒன்றினை நினைவு கூர்ந்து எடுத்துக் காட்டி பேசினார்.

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 8 இன் தொடக்க விழாவில் புதிதாக தொகுப்பாளராக வந்துள்ள நடிகர் விஜய் சேதுபதி பார்த்திபன் எழுதிய கவிதை ஒன்றினை நினைவு கூர்ந்து எடுத்துக் காட்டி பேசினார்.

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 8 இன் தொடக்க விழாவில் புதிதாக தொகுப்பாளராக வந்துள்ள நடிகர் விஜய் சேதுபதி பார்த்திபன் எழுதிய கவிதை ஒன்றினை நினைவு கூர்ந்து எடுத்துக் காட்டி பேசினார்.இயக்குநரும், நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவரது X தளத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் செயல் குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி

எந்தக் கதையாக இருந்தாலும் அதனை தன் பாணியில் நடித்து அசத்துவதில் விஜய் சேதுபதி வல்லவர். தமிழ் அல்லாது தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பான் இந்தியா நட்சத்திரமாக ஜொலித்து வரும் விஜய் சேதுபதி ஹீரோ ரோலில் மட்டும் நடிப்பதில்லை. வில்லன், கேமியோ என எந்த ரோல் கொடுத்தாலும் அதக்களம் செய்து விடுவார். மேலும் இவரது அசாத்திய நடிப்புத் திறன் காரணமாகவே பல மொழி திரை ரசிகர்களும் இவரின் மாபெரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

குறிப்பாக விஜய் சேதுபதி ரசிகர்கள் சிலர் இனி ஹீரோ ரோலில் மட்டும் நடிக்குமாறு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது ஹீரோவாக மட்டும் நடித்து வருகிறார். இவர் கடைசியாக மகாராஜா படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். மேலும் இப்படம் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளுக்கு டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இப்படம் அனைத்து மொழிகளிலும் வசூலை அள்ளிக் குவித்தது. தற்போது விஜய் டிவியின் பிரதான நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 8 இன் தொகுப்பாளராக மாறி உள்ளார். இதுவரை இந்நிகழ்ச்சிக்கு நடிகர் கமல்ஹாசன் இருந்து வந்த நிலையில் இந்த சீசன் இவர் வந்துள்ளார். இவர் சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிறப்பார்க்கப்பட்டு வருகிறது.

பார்த்திபன் நெகிழ்ச்சி

நடிகரும் இயக்குநரமான பார்த்திபன் அவரது X தளத்தில் விஜய் சேதுபதியை புகழ்ந்து ஒரு பதிவை போட்டுள்ளார். தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான பார்த்திபன் முதலில் இயக்குநர் கே. பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இவர் 1989 ஆம் ஆண்டு இயக்கி நடித்த புதிய பாதை திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. மேலும் இதே படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த ஆண்டு இயக்கி வெளிவந்த டீன்ஸ் கலவையான விமர்சனங்களை பெற்றது. முன்னதாக 2022 ஆம் ஆண்டு வெளியான இரவின் நிழல் மாறுபட்ட முறையில் எடுக்கப்பட்ட ஒரு படமாகும். விருது விழாக்களில் ஓபனாக பேசும் பார்த்திபன் அவரது பேச்சுக்களுக்காக சில சமயம் ட்ரோல் செய்யப்படுவதும் உண்டு. இந்நிலையில் விஜய் சேதுபதி பிக்பாஸ் தொடக்க விழாவில் பார்த்திபன் எழுதிய ஒரு கவிதையை சுட்டிக்காட்டி பேசியிருந்தார். அதனை தன் X தளத்தில் பதிவிட்டு அதற்கு நெகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார். அவருடைய அந்த பதிவில், " நான்

எப்போதோ

எங்கேயோ

கூறியதை

கூர்ய கவனக்கார நண்பர்-நினைவுக்

கூறும் போது அக்கவிதையின்

கவுரவம் கூடுகிறது!!!

தனிமையின் எக்ஸ்ரேவான எனக்கதன்

சுயம் அறிந்ததால் ….

தீவு என்றால்

நாற்புறமும் நீரன்றி வேறு

துணையற்ற தனிமைக் கூடு!

அதன் சோகமறிந்ததால்

‘தனியான தீவுக்கு

துணையாகப் போய்விடலாமா?’

என யோசிப்பதாய் எழுதியிருந்தேன்.ஏதோ

இல்லாமலே இருக்கிறேன் BBயில்!!!

எனக் குறிப்பிட்டு இருந்தார்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை