தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Parthiban, Vadivelu: விரைவில் வரும் காம்போ.. பார்த்திபன் அதிரடி அறிவிப்பு

Parthiban, Vadivelu: விரைவில் வரும் காம்போ.. பார்த்திபன் அதிரடி அறிவிப்பு

Aarthi Balaji HT Tamil

Jan 07, 2024, 01:30 PM IST

google News
கலைஞர் 100 விழாவில் நடிகர் பார்த்திபன் மற்றும் வடிவேலு கலந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்து உள்ளனர்.
கலைஞர் 100 விழாவில் நடிகர் பார்த்திபன் மற்றும் வடிவேலு கலந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்து உள்ளனர்.

கலைஞர் 100 விழாவில் நடிகர் பார்த்திபன் மற்றும் வடிவேலு கலந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்து உள்ளனர்.

தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நூற்றாண்டு விழாவை தமிழ் திரையுலகம் விழாவாக எடுத்துள்ளது. சென்னையில் நேற்று ( டிச. 6) பிரமாண்ட கலை நிகழ்ச்சி நடந்தது.

இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சூர்யா, வடிவேல், கார்த்தி, தனுஷ், பார்த்திபன், வடிவேலு, சிவகார்த்திகேயன், கன்னட ஸ்டார் சிவராஜ்குமார் மற்றும் நடிகை நயன்தாரா, உள்ளிட்ட பல திரைக்கலைஞர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்நிலையில் விழாவில் நடிகர் பார்த்திபன் மற்றும் வடிவேலு கலந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்து உள்ளனர். 

இதனை இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “ நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்தால் ? என்பது பற்றி நீண்ட நேரம் பேசினோம்.

பார்க்கலாம்.. விரைவில் வந்தால்! இல்லாவிட்டாலும் பார்க்கலாம் எப்போது வந்தாலும் “ எனக் குறிப்பிட்டு உள்ளார்.

தமிழ் சினிமாவில் கவுண்டமனி, செந்திலுக்கு பிறகு ஒரு ஜோடியின் காம்போ நகைச்சுவையில் ஹிட் என்றால் அது பார்த்திபன், வடிவேலு தான்.

குண்டக்கா மண்டக்கா, வெற்றிக் கொடி கட்டு, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட ஏராளமான படங்களில் இணைந்து நடித்து இருக்கிறார்கள். அந்த படங்கள் அனைத்துமே ஹிட்டாகி உள்ளன.

மீண்டும் இவர்களின் கூட்டணி எப்போது இணையும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த பதிவு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை