தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம்.. அதிகார வர்க்கத்தின் மீது சபதம்.. வெற்றி பெறுகிறார் எம்ஜிஆர்

உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம்.. அதிகார வர்க்கத்தின் மீது சபதம்.. வெற்றி பெறுகிறார் எம்ஜிஆர்

May 21, 2024, 09:20 AM IST

google News
Periya Idathu Penn: அந்தக்காலத்தில் எம்ஜிஆருக்கு புகழைத் தேடித்தந்த படங்களுள் பெரிய இடத்துப் பெண் படமும் ஒன்று. 61 ஆண்டுகள் வைர விழா காணும் இந்நாளில் அந்தப்படத்தை பற்றி நினைவுறுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறது ஹெச்டி.தமிழ்
Periya Idathu Penn: அந்தக்காலத்தில் எம்ஜிஆருக்கு புகழைத் தேடித்தந்த படங்களுள் பெரிய இடத்துப் பெண் படமும் ஒன்று. 61 ஆண்டுகள் வைர விழா காணும் இந்நாளில் அந்தப்படத்தை பற்றி நினைவுறுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறது ஹெச்டி.தமிழ்

Periya Idathu Penn: அந்தக்காலத்தில் எம்ஜிஆருக்கு புகழைத் தேடித்தந்த படங்களுள் பெரிய இடத்துப் பெண் படமும் ஒன்று. 61 ஆண்டுகள் வைர விழா காணும் இந்நாளில் அந்தப்படத்தை பற்றி நினைவுறுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறது ஹெச்டி.தமிழ்

பெரிய இடத்துப் பெண், 1963ம் ஆண்டு வெளியான எம்ஜிஆர் நடித்த திரைப்படம். காதல், காமெடி என எம்ஜிஆருக்கு நல்ல புகழை பெற்றுத்தந்த திரைப்படம். இந்தப்படத்தை இயக்குனர் ராமண்ணா இயக்கியிருந்தார். இந்தப்படம் 1963ம் ஆண்டு மே 10ம் தேதி வெளியாகியது.

சரோஜாதேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடத்திருப்பார். எம்.ஆர்.ராதா, டி.ஆர்.ராஜகுமாரி உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள். நூறு நாட்களை கடந்து ஓடிய பிளாக் படர் ஹிட் கொடுத்த திரைப்படமாக பெரிய இடத்துப் பெண் இருந்தது.

அதற்கு மற்றுமொரு காரணம், படத்தின் அனைத்து பாடல்களுமே ஹிட், இன்று வரை நெஞ்சில் நீங்காமல் குடியிருப்பவை. அன்று வந்ததும் அதே நிலா பாடல் டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலாவின் குரலில் இன்றும் நமது நெஞ்சைவிட்டு நீங்காத பாடலாக உள்ளது. அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா? என்ற சோகப்பாடலும் தெறி ஹிட் கொடுத்த பாடல்தான். மற்றுமொரு கொண்டாட்டமான பாடல் கண்ணென்ன கண்ணென்ன கலங்குது பாடலும் கொண்டாட்டமான மனநிலையில் பாடப்பட்ட நல்ல ஹிட் பாடல் ஆகும்.

பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணம் பாடலெல்லாம் இன்றளவும் ஊர் திருவிழாக்களில் ஒலிக்கக்கூடிய மவுசு குறையாத பாடல். கட்டோடு குழலாட ஆட பாடல் இன்றும் ஒரு வித்யாசமான மனநிலைக்கு நம்மை கொண்டு செல்லும் வேறு வகையில் கம்போஸ் செய்யப்பட்ட பாடலாகும்.

இந்தப்படத்தில் ஒரு கூடுதல் சிறப்பு என்னவென்றால், படத்தின் அனைத்து பாடல்களையும் டி.எம்.எஸ் மட்டுமே பாடியிருப்பார். அனைத்து பாடல்களையும் எழுதியவர் கண்ணதாசன். இசையமைத்தவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆவர்.

இந்தப்படம் பிற்காலத்தில் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. கமல்ஹாசன் நடித்த சகலகலா வல்லவன் படமும் இந்த கதையை தழுவி எடுக்கப்பட்ட படம்தான்.

எம்ஜிஆரும் அவரது அக்கா டி.ஆர்.ராஜகுமாரியும் கிராமத்தில் கூலித்தொழில் செய்து வாழ்ந்து வருகிறார்கள். அந்த கிராமத்தின் பண்ணையார் எம்.ஆர்.ராதா, அவரது மகன் அசோகன் மற்றும் மகள் சரோஜாதேவி ஆகியோரும் பணத்திமிர் பிடித்தவர்களாக இருக்கிறார்கள். சரோஜா தேவி அருகில் உள்ள நகரத்தில் உயர்கல்வி படிக்கிறார்.

அதிகார வர்க்கத்திற்கும், உழைக்கும் வர்க்கத்திற்கும் நடக்கும் வழக்கமான மோதல் கூலித்தொழிலாளியான எம்ஜிஆருக்கும், ஜமீன்தாருக்கும் நடைபெறுகிறது.

சரோஜதேவியை ஒரு தலையாக விரும்பும் நாகேஷ், எம்ஜிஆர்க்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை விரும்பும் பண்ணையார் மகன் அசோகன், அந்தப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள நடக்கும் போட்டியில், சரோஜா தேவியால், எம்ஜிஆருக்கு மயக்க மருந்து கலக்க பணிக்கப்படும் நாகேஷ், அதைக் குடித்து மயங்கி தோற்ற எம்ஜிஆர். இதனால் அசோகனுக்கு அவர் விரும்பிய பெண் கிடைக்கிறார்.

அவருக்கு மயக்க மருந்து கலக்கப்பட்டது தெரிந்த எம்ஜிஆர், அதற்கு காரணமான சரோஜா தேவியை மணப்பேன் என்று சூளுரைக்கிறார். இந்நிலையில் கோயில் தகராறு வேறு இரு குடும்பத்தினர் இடையே ஏற்படுகிறது என்று இறுதியில் பண்ணையாரை திருத்தி எம்ஜிஆர் சரோஜாதேவியை மணந்து தனது வாக்கை காப்பாற்றினாரா என்பதுதான் படத்தின் மீதி கதை.

அந்தக்காலத்தில் எம்ஜிஆருக்கு புகழைத் தேடித்தந்த படங்களுள் பெரிய இடத்துப் பெண்ணும் ஒன்று. 61 ஆண்டுகள் வைர விழா காணும் இந்நாளில் அந்தப்படத்தை பற்றி நினைவுறுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறது ஹெச்டி.தமிழ்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி