'இதெல்லாம் கூமுட்டை.. லாரி அடிச்சு செத்துறாத' விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்.. இட்ஸ் ராங் ப்ரோ!
Nov 02, 2024, 11:12 AM IST
நடிகர் விஜய் கூறியவை கொள்கை அல்ல. அவை வெறும் கூமுட்டை தான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான விமர்சனம் செய்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டி வி. சாலையில் நடத்தி முடித்துள்ளார். அந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், தன் தொண்டர்களை உற்சாகப்படுத்தி கட்சி கொள்கை, இனி அரசியலில் நாம் என்ன செய்ய வேண்டும், இலக்கு என்ன என விளக்கி இருப்பார். அத்துடன், திராவிடம், தமிழ் தேசியம் குறித்தும் பேசி இருப்பார்.
விஜய் கொள்கை அழுகிய கூமுட்டை
இந்நிலையில், விஜய்யின் கருத்துகளை அவ்வப்போது சாடிவந்த இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான், அவரது கட்சியின் சார்பில் சென்னை பெரம்பூரில் நடந்த தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் விஜய்யை கடுமையாகத் தாக்கி விமர்சித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பேசியசீமான், நடிகர் விஜய் கட்சியின் அடிப்படையே தவறானது. அவரது கட்சியில் உள்ளது கொள்கை அல்ல. கூமுட்டை. அதுவும் அழுகிய கூமுட்டை என காட்டமாக பேசியுள்ளார். அத்துடன், ஒரு தரப்புக்கு திராவிடம் என்றால் என்ன என்றே தெரியவில்லை. ஒரு தரப்புக்கு தமிழ்த் தேசியம் என்றால் என்ன என்றே தெரியவில்லை. திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்று என நடிகர் விஜய் பேசியதை கேட்டு பயந்துவிட்டேன் என கிண்டல் செய்துள்ளார்.
லாரி அடுத்து செத்துவிடாதே
மேலும், தமிழ்தேசியமும் திராவிடமும் ஒன்றா ப்ரோ? வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ! எனக் கூறி குட்டிக்கதை சொல்பவன் அல்ல தம்பி.. வரலாற்றை கற்பிக்க வந்தவன் என அவரைப் பற்றி அவரே பெருமையாக பேசினார். ஒன்று சாலையின் அந்தப் பக்கம் நிற்க வேண்டும், இல்லையென்றால் இந்தப் பக்கத்தில் நிற்க வேண்டும். நடுநிலை என்று கூறிக்கொண்டு சாலைக்கு நடுவே நின்றால், லாரி வரும் போது சாலையில் அடிபட்டு செத்துப் போக நேரிடும்.
நடுநிலை இல்லை கொடுநிலை
விடுதலை போராட்டம் என்றால் மாவீரன் சுபாஷ் சந்திர போஸ் பக்கம் நிற்க வேண்டும், இல்லை வெள்ளைக்காரன் லார்ட் மவுண்ட் பேட்டர்ன் பிரபு பக்கம் நிற்க வேண்டும். இல்லை பகத்சிங் பக்கம் நிற்க வேண்டும். ஆனால் எந்தப் பக்கமும் நிற்காமல் நான் நடுநிலை எனக் கூறினால், இது நடுநிலை இல்லை மிகக் கொடுநிலை எனவும் விமர்சித்துள்ளார்.
மெயின் பிக்சர் வரும்
மேலும் பேசிய அவர், இங்கு திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா எனப் பேசினாலே 4 மணி நேரம் ஆகும். ப்ரோ இது ஒரு ட்ரைலர் ப்ரோ. மெயின் பிக்சர் எப்போ வரும்? அடுத்து உங்களது படம் பார்த்த பின்னால் வரும்.
நான் இப்படி ஒரு கொள்கையை கேட்டதே கிடையாது. எப்படி ஆவின் பாலோடு கருப்பட்டி பால் கொடுக்கும் கொள்கை எனக் கூறியவர், நாம் தமிழர் கட்சியின் லட்சியத்திற்கு எதிராக யார் வந்தாலும் எதிர்ப்போம். தனது லட்சியத்துக்கு எதிராக தம்பி வந்தாலும், அண்ணன் வந்தாலும் எதிரி எதிரிதான் எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
கடந்த மாதம் ஆதரு இந்த மாதம் காட்டம்
முன்னதாக கடந்த மாதம், விஜய் கட்சி தொடங்கியது குறித்தும் அவரது மாநாடு குறித்தும் பேசிய சீமான், விஜய்யின் கொள்கை ஆயிரம் இருக்கட்டும். அவர் கொடி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆயிரம் இருந்தாலும் அவர் என் தம்பி. என்னை எதிர்த்தே வேலை செய்தாலும் நான் அவரை ஆதரிப்பேன் எனக் கூறி இருந்தார். இந்நிலையில், மாநாட்டிற்குப் பின் அவரை இப்படி கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.