தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மனம் முழுக்க வஞ்சம்.. கயலின் காதலுக்கு கெடு விதித்த சரவண வேலு.. கயல் சீரியல் அப்டேட்

மனம் முழுக்க வஞ்சம்.. கயலின் காதலுக்கு கெடு விதித்த சரவண வேலு.. கயல் சீரியல் அப்டேட்

Nov 25, 2024, 09:28 AM IST

google News
கயல்- எழிலின் காதலை இன்னும் ஒரே வாரத்தில் முடித்துக் காட்டுவதாக சரவண வேலு சமதமிட்டிருக்கிறான்.
கயல்- எழிலின் காதலை இன்னும் ஒரே வாரத்தில் முடித்துக் காட்டுவதாக சரவண வேலு சமதமிட்டிருக்கிறான்.

கயல்- எழிலின் காதலை இன்னும் ஒரே வாரத்தில் முடித்துக் காட்டுவதாக சரவண வேலு சமதமிட்டிருக்கிறான்.

திருமணம் முடிந்த கையோடு கயல் தன் சொந்த ஊரில் உள்ள கோயிலுக்கு சென்று பொங்கல் வைக்க குடும்பத்துடன் செல்கிறாள்.

கயல் குடும்பத்திடம் சண்டையிடும் மக்கள்

அங்கு, அவரது தந்தை ஊரில் உள்ளவர்களின் பணத்தை ஏமாற்றி சென்றதாகவும், கயல் குடும்பம் உடனடியாக ஊரைவிட்டு வெளியே போக வேண்டும் எனவும் கூறி சண்டைக்கு வருகின்றனர். இதனால் என்ன செய்வது என அறியாமல் கயல் குடும்பம் தவித்து வந்தது. இந்த சமயத்தில் கயல் குடும்பம் ஊருக்கு வந்ததை அறிந்த சரவண வேலு, பல வருடங்களுக்குப் பின் ஊருக்கு வந்த கயலைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்தாார்.

சரவண வேலுவின் திட்டம்

ஆனால், கோயிலுக்கு சென்று பார்க்கும் போது தான் தெரிந்தது கயலுக்கு திருமணம் ஆனது. இதனால், ஒரு பக்கம் கோபமடைந்தாலும், முதலில் ஊர் மக்களிடம் இருந்து கயலை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், ஊரார் முன் கயல் குடும்பத்திற்காக பரிந்து பேசினார்.

கயலின் உறுதி

இதையடுத்து, கயல் இன்னும் ஒரு வருடத்தில் என் அப்பா கொடுக்க வேண்டிய பணத்தை கொடுப்பதாகவும் அத்துடன் என் அப்பா எந்த தவறும் செய்யாதவர் என்பதை நிரூபிப்பதே என் வாழ்நாள் லட்சியம் என்றும் கயல் கூறுகிறார்.

வஞ்சத்துடன் பழகும் சரவண வேலு

ஆனால், கயலுக்கு உதவுவது போல் வந்த சரவண வேலு, கயலை எப்படியாவது எழிலிடம் இருந்து பிரிக்க வேண்டும். தான் இத்தனை நாள் காத்திருந்த எழிலை எப்படியாவது அடைய வேண்டும் என்ற வஞ்சத்தில் இருக்கிறான், இதையடுத்து, இன்னும் ஒரே வாரத்திற்குள் கயலிடமிருந்து எழிலை பிரிப்பதாகவும் மனதிற்குள் சவால் விட்டுக் கொள்கிறான்.

உண்மை தெரியவருமா?

அதுமட்டுமின்றி, தன்னை இந்தக் குடும்பத்திற்கு உதவ வந்தவன் போல காட்டிக் கொண்டு அவர்களுடன் உறவாடுகிறான். இதுகுறித்த ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.

கயல், ஊரார் முன் தன் தந்தை குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பாரா, சரவணவேலுவின் திட்டம் நிறைவேறியதா, பெரியப்பா உண்மையை சொல்வாரா என்பதை எல்லாம் வரும் நாட்களில் பார்க்கலாம்.

ஒரே செக் தான்

முன்னதாக ஊர்காரர்களின் பணம் பறிபோனதாக தொடர்ந்து பேசிய நிலையில், ஆத்திரமடைந்த எழில், பணம் எவ்வளவு வேண்டும் என சொல்லுங்கள், ஒரே செக்கில் இப்போதே அதை செலுத்தி விடுகிறேன் என ஆவேசமாக பேசுகிறார். இதைக் கேட்ட சரவண வேலு கோவமாக எழிலை பார்க்கிறார்.

ஒரு வருடம் அவகாசம்

கயல், பொறுமையாக இருந்து. உங்கள் பணத்திற்கும் என் அப்பாவிற்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறியதுடன், இன்னும் ஒரு வருடத்திற்குள் என் அப்பா செலுத்த வேண்டிய காசை செலுத்தி முடிக்கிறேன் என சவால் விட்டுள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி