தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நடிகை நிவேதா பெத்து ராஜிற்கு சிக்னலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! 8 வயது சிறுவன் செய்த காரியம்!

நடிகை நிவேதா பெத்து ராஜிற்கு சிக்னலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! 8 வயது சிறுவன் செய்த காரியம்!

Suguna Devi P HT Tamil

Nov 04, 2024, 02:02 PM IST

google News
தமிழ் சினிமாவைச் சேர்ந்த நடிகை நிவேதா பெத்துராஜ் அடையாறு சிக்னலில் பணத்தை பறிகொடுத்தாக அவரது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவைச் சேர்ந்த நடிகை நிவேதா பெத்துராஜ் அடையாறு சிக்னலில் பணத்தை பறிகொடுத்தாக அவரது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவைச் சேர்ந்த நடிகை நிவேதா பெத்துராஜ் அடையாறு சிக்னலில் பணத்தை பறிகொடுத்தாக அவரது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவைச் சேர்ந்த நடிகை நிவேதா பெத்துராஜ் அடையாறு சிக்னலில் பணத்தை பறிகொடுத்தாக அவரது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறு சிக்னலில் புத்தகம் விற்பனை செய்வது போல ஒரு 8 வயது மதிக்கத்தக்க சிறுவன் நடிகை நிவேதா பெத்துராஜை ஏமாற்றி அவரது கையில் இருந்த பணத்தை பறித்து சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதிவைத் தொடர்ந்து பலரும் ரியாகட் செய்து வருகின்றனர். 

நிவேதா பெத்துராஜ்

மதுரையைச் சேர்ந்த நடிகை நிவேதா பெத்துராஜ் முதன் முதலாக ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், சங்கத்தமிழன் உட்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது பார்ட்டி படத்திலும் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் முக்கிய நடிக்கையாகவும் இருந்து வருகிறார். 

 இவர் இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக உள்ளார். மேலும் இவரது பல போட்டோக்களையும் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள அடையாறு சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது அவருக்கு நடந்த ஒரு அதிர்ச்சி நிறைந்த சம்பவத்தையும் பதிவிட்டுள்ளார். 

இன்ஸ்டா பதிவு 

இது தொடர்பான அவரது ஸ்டோரியில், 'சென்னை அடையார் சிக்னலில் 8 வயது சிறுவன் ஒருவன் என்னை ஏமாற்றி விட்டான். அவன் முதலில் ஒரு புத்தகத்தை ரூ.50-க்கு என்னிடம் விற்பனை செய்ய முயன்றான். நான் ரூ.100 கொடுத்தேன். அப்போது அந்த சிறுவன் என்னிடம் ரூ.500 கேட்டான். நான் புத்தகத்தை அவனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, 100 ரூபாயை மீண்டும் வாங்கினேன். அந்த நேரத்தில் புத்தகத்தை காருக்குள் வீசிய சிறுவன், என் கையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு ஓடிவிட்டான். இவ்வாறு அவர் கூறியுள்ளார். பின்னர் இது போன்ற பிரச்சனையை நீங்களும் சந்தித்துக் உள்ளீர்களா என கேள்வி எழுப்பியும் உள்ளார். இது தொடர்பாக அடையார் காவல் நிலையத்தில் இருந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தற்போது இந்த ஸ்டோரியை அவரது பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். சென்னை மாநகரில் உள்ள பல சிக்னலில் யாசகம் கேட்பவர்களும், சில பொருட்களை விற்பதும் வாடிக்கையான ஒன்றாகும். இந்நிலையில் பொருளாதார நிலையில் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களே இவ்வாறு யாசகம் கேட்பதிலும் சிறு பொருட்களை விற்பதிலும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நிவேதிதா நிவேதா பெத்துராஜிற்கு நடந்திருப்பது பல சமயங்களில் சென்னை சிக்னலில் நடந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் குறிப்பாக அடையாறு சிக்னலில் இவ்வாறு நடப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அதிக ஆள்நடமாட்டம் உள்ள பகுதியாக இந்த பகுதி இருந்து வருகிறது. இது குறித்தான விசாரணை முடிந்து அந்த வழிப்பறி தொடராமல் தடுக்கப்படுவதே அப்பகுதியல் அடிக்கடி செல்லும் மக்களுக்கான ஒரு சிறப்பான உதவியாகும். பெண்களும் நகைகள் அணிந்து ஸ்கூட்டி ஒட்டுகின்றனர். இதனை மிகவும் முக்கியமான ஒன்றாக கருதி உடனடி நடவடிக்கை மற்றும் அதற்கான தீர்வு காணவேண்டும் என்பதே நல்லது. 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை