தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கங்குவா படக்குழுவினரால் என்றும் நினைவு கூறப்படுவீர்கள் நிஷாத்- நடிகர் சூர்யா இரங்கல்!

கங்குவா படக்குழுவினரால் என்றும் நினைவு கூறப்படுவீர்கள் நிஷாத்- நடிகர் சூர்யா இரங்கல்!

Oct 30, 2024, 04:11 PM IST

google News
" நிஷாந்த் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். ஒரு முக்கிய நபராக கங்குவா படக்குழுவினரால் என்றும் நினைவு கூறப்படுவீர்கள். நிஷாத்தின் குடும்பத்தினர் மற்றம் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று நடிகர் சூர்யா தெரிவித்து உள்ளார்.
" நிஷாந்த் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். ஒரு முக்கிய நபராக கங்குவா படக்குழுவினரால் என்றும் நினைவு கூறப்படுவீர்கள். நிஷாத்தின் குடும்பத்தினர் மற்றம் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று நடிகர் சூர்யா தெரிவித்து உள்ளார்.

" நிஷாந்த் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். ஒரு முக்கிய நபராக கங்குவா படக்குழுவினரால் என்றும் நினைவு கூறப்படுவீர்கள். நிஷாத்தின் குடும்பத்தினர் மற்றம் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று நடிகர் சூர்யா தெரிவித்து உள்ளார்.

கங்குவா படத்தின் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் படத்தொகுப்பாளரான நிஷாத். இவர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த புதிய படத்துக்கும் படத்தொகுப்பாளராக பணியாற்ற இருந்தார். இந்த சூழலில் இவர் திடீரென மரணம் அடைந்திருப்பது கங்குவா படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் நிஷாத்திற்கு கங்குவா ஹீரோ சூர்யா தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, " நிஷாந்த் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். ஒரு முக்கிய நபராக கங்குவா படக்குழுவினரால் என்றும் நினைவு கூறப்படுவீர்கள். நிஷாத்தின் குடும்பத்தினர் மற்றம் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று நடிகர் சூர்யா தெரிவித்து உள்ளார்.

கேரளாவை சேர்ந்த படத்தொகுப்பாளரான 43 வயதாகும் நிஷாந்த் யூசுஃப் கொச்சியிலுள்ள பனம்பிள்ளி நகரில் உள்ள தனது பிளாட்டில் அதிகாலை 2 மணிக்கு இறந்த நிலையில் கண்டறியப்பட்டார்.

போலீஸ் விசாரணை

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்து நிஷாத் யூசூஃப் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக எர்ணாக்குளம் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நிஷாத் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பிளாட்டில் வசித்து வந்துள்ளார்.

நிஷாத் இறப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருது வென்ற படத்தொகுப்பாளர்

மலையாள சினிமாவின் படத்தொகுப்பாளரான நிஷாத், பல்வேறு சூப்பர் ஹிட் மலையாள படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கடந்த 2022இல் வெளியான தள்ளுமல்லா என்ற படத்துக்காக சிறந்த படத்தொகுப்பாளர், கேரளா அரசு விருதை வென்றார். உண்டா, ஒன், சவுதி வெல்லக்கா, சாவர், அடியோஸ் அமிகோ போன்ற சூப்பர் ஹிட் படங்களுக்கு இவர்தான் எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பிரமாண்டமாக உருவாகியிருக்கும் கங்குவா படத்துக்கு இவர்தான் எடிட்டராக பணிபுரிந்து படம் வெளியீட்டுக்கு காத்திருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் மரணம் அடைந்துள்ளார்.

ஏற்கனவே கங்குவா படத்தின் கலை இயக்குநர் மிலன் உயிரிழந்த நிலையில், தற்போது எடிட்டரும் இறந்திருப்பது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இரண்டு பாகங்களில் வெளிவரும் கங்குவா

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படம் கடந்த 2022இல் வந்தது. இதே ஆண்டில் விக்ரம் படத்தில் ரோலக்ஸ், ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட் படத்தில் சூர்யாவாகவே கேமியோ கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் சூர்யா.

இதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து சூர்யா நடிப்பில் வெளியாகும் படமாக கங்குவா இருந்து வரும் நிலையில், படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முதல் பாகத்தின் கதை தற்காலத்தில் தொடங்கி பீரியட் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. சுமார் 2.30 மணி நேரம் ஓடக்கூடிய படத்தில் 2 மணி நேரம் வரை பீரியட் காட்சிகள் இடம்பெறும் என படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா கூறியுள்ளார்.

அத்துடன், படத்தின் க்ளைமாக்ஸில் இரண்டாம் பாகத்துக்கான லீட் சொல்லப்பட்டிருக்கும் எனவும் கூறியுள்ளார். படம் தமிழ் தவிர 38 மொழிகளில் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது. அத்துடம் படம் வட இந்தியாவில் மட்டும் சுமார் 3 ஆயிரம் ஸ்கிரீன்களில் வெளியாக இருக்கிறது. படத்தின் இசை வெளியீடு கடந்த சனிக்கிழமை முடிவுற்ற நிலையில், விரைவில் கங்குவா புதிய ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்ப்டுகிறது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை