நயன்தாரா பிறந்தநாளிற்கு வரப்போகும் ட்ரீட்! இனி வெயிட்டிங் ஓவர்! ஓடிடியில் வெளியாகும் விக்கி நயன் திருமண வீடியோ!
Oct 30, 2024, 03:21 PM IST
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் பிரம்மாண்டமாக நடந்தது.
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் பிரம்மாண்டமாக நடந்தது.இந்த திருமண விழாவிற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் வரை பல நட்சத்திரங்கள் வந்திருந்தனர் இந்நிலையில் இவர்களது திருமண வீடியோ இரண்டு வருடங்களுக்கு பின்னர் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்தார். படப்பிடிப்பு தளத்திலேயே இருவருக்கும் காதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சில வருடங்கள் காதலித்தவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் அதே ஆண்டில் இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர் அவர்கள் இருவருக்கும் உயிர் மற்றும் உலக் என பெயரும் வைத்தனர்.
இவர்களது திருமண வீடியோ ஓடிடி தளத்தில் தற்போது வெளியாக உள்ளது. திருமணம் நடந்து முடிந்த பொழுதே Nayanthara Beyond the Fairy Tales என்கிற தலைப்பில் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஆவணப்படமாக திருமண வீடியோ வெளியாக இருந்தது. இருப்பினும் திருமண புகைப்படங்களை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவர்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டதாக கூறி நெட்பிளிக்ஸ் குற்றம் சாட்டி இருந்தது. இந்நிலையில் அனைத்து பிரச்சினைகளையும் சமூகமாக முடித்து வரும் நவம்பர் 18 அதாவது நயன்தாராவின் பிறந்தநாள் அன்று இந்த வீடியோ தளத்தில் வெளியாக உள்ளது.
நயன்தாராவின் பயணம்
நயன்தாராவின் வாழ்க்கையில் குழந்தை பருவம் தொடங்கி தற்போது திருமணம் வரையிலான அவரது வாழ்க்கையில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் தொகுத்து இந்த ஆவணப்படம் தயாராகியுள்ளது. இந்த ஆவண படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். மேலும் இந்த ஆவணப்படம் தொடர்பாக பல முன்னணி ஹீரோக்களும் இதில் பேசியுள்ளனர் இது குறித்த முன்னோட்டம் நெற்றி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதில் தெலுங்கு நடிகர்கள் ராணா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் நயன்தாராவை குறித்து பேசும் காட்சிகள் உள்ளன.
நயன்தாராவின் வாழ்க்கையில் நடந்த காதல் அதனால் அவருக்கு கிடைத்த சந்தோஷம் துக்கம் பின்பு விக்னேஷ் சிவன் மீதான காதல் அவர்களது திருமண நிகழ்வு என அனைத்தையும் தொகுத்து இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி ஹீரோயினாக நிலைநாட்டி வரும் நயன்தாரா பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு முன்னோடியாக இருந்து வருகிறார். நயன்தாராவிற்கு முன் பெண்களை மட்டுமே மையமாக வைத்து இயக்கப்பட்ட தமிழ் படங்கள் மிகவும் குறைவானதாகும். இந்நிலையில் அறம் போரா போன்ற பெண்களையே முதன்மை கதாபாத்திரமாக வைத்து இயக்கும் படம் நயன்தாராவின் வரவிற்கு பின்னரே அதிகரித்துள்ளது.
தமிழ் சினிமா மட்டும் அல்லாது தென்னிந்திய சினிமா உலகில் முன்னனி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். மேலும் இவரது திருமண வீடியோ வெளியாவதை பல நெட்டிசன்கள் குழந்தையே வந்து பேசப்போகுது இப்போ தான் வீடியோ வரப்போகுதா என கலாய்த்து வருகின்றனர்.
டாபிக்ஸ்