கடவுளே என் குடும்பம் நல்ல இருக்கணும்.. குலதெய்வம் கோயிலில் நயன் - விக்கி
Apr 05, 2023, 01:36 PM IST
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தனர்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில் ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமணம் ஆன நான்கே மாதத்தில், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதை அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் நயன்தாரா. மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணமாகிய நான்கே மாதத்தில், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
நடிகை நயன்தாரா, முதல் முறையாக தன்னுடைய இரட்டை குழந்தைகளின் பெயர்களை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இவர்களின் பெயர்கள் யாரும் எதிர்பாராத விதத்தில் மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. அதன்படி ஒரு மகனுக்கு 'உயிர் ருத்ரேனில் என் சிவன்' என்றும் மற்றொரு பிள்ளைக்கு 'உலக தெய்வேக் என் சிவன்' என பெயர் சூட்டினார்.
இந்நிலையில் இன்று பங்குனி உத்திரம் தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவரும் தங்களுடைய குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை நயன்தாராவும், கணவர் விக்னேஷ் சிவனும் கும்பகோணத்தில் உள்ள குலதெய்வகோயிலுக்கு சென்று வழிபாடு செய்தனர்.
திருச்சி விமான நிலையத்திற்கு இருவரும் சென்ற புகைப்படங்கள் வைரலானது.
தற்போது இயக்குனர் அட்லி, ஷாருக்கானை வைத்து இயக்கி வரும், 'ஜவான்' படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கலந்து கொண்ட போது, குழந்தைகளுடன் நயன்தாரா ஏர்போர்ட் வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்